யாதவாப்யுதயம் (சர்கம் – 4)

 

 

 

யாதவாப்யுதயம் (சர்கம் 4)

 

இந்த ஸர்கத்தில் ஸ்வாமி தேசிகன், பூதனா மோக்ஷம், மற்ற அசுரர்கள் வதம் செய்யப்படுதல், மற்றும் கண்ணனின் ப்ருந்தாவந லீலைகள், காளிங்க நர்த்தனம் ஆகியவற்றை விவரித்துள்ளார்

 

 1. மநீஷிதம் கைதவ மாநுஷஸ்ய

ச்ருத்வா ப4ய க்ரோத4 பரிப்லுதாத்மா

கம்ஸ: சிரம் ப்ராக்­34வ காலநேமி:

சிந்தார்ணவே மக்3ந இவாவதஸ்தே2 இவ அவதஸ்தே

 

முன்பிறவியில் காலநேமியாய் வந்தவன், இப்போது கம்சனாய் உள்ளவன், மனிதனாய்த் தோன்றியிருக்கும் பகவானுடைய நோக்கைக் கேட்டு அச்சமும் கோபமுமாய் அலைகின்ற மனம் உடையவனாய் நெடும்பொழுது விசாரக் கடலில் மூழ்கி நின்றான்.

 

 

 1. ஸ து3ர்த3மாந் ஆஸுர ஸத்வ பே4தா3ந்

நேதா ஸமாஹூய ந்ருசம்ஸசேதா:

ப்ரஸ்தா2பயாமாஸ பரைர் அத்4ருஷ்யம்

நந்தா3ஸ்பத3ம் நாத2விஹாரகு3ப்தம்

 

அரசனான அவன் பகவானை வதைப்பதில் நோக்கமுடையவனாகி, அசுராம்சராய், அடக்கவாகாத பல ப்ராணிகளை, ஸர்வேச்வரன் விளையாடுவதால் காக்கப்படுவதும், பகைவர்களால் அணுக இயலாததுமான நந்தகோகுலத்திற்கு ஏவினான்.

 

(கம்சன் அசுரர்களை ஏவுதல்)

 

 1. கதா3சித் அந்தர்ஹித பூதநாத்மா

கம்ஸ ப்ரயுக்தா கில காபி மாயா

நித்3ரா பராதீ4ந ஜநே நிஷீதே2

வ்ரஜம் யசோதா3க்ருதிர் ஆவிவேச  (ஸ்ரீமத் பாகவதம் (10/6/2-13)

 

ஒருநாள் கம்சனால் ஏவப்பட்ட பூதனை என்னும் மாய பேய்ச்சி  பிறர் அறியலாகாதபடி பறவையாக மாறி பறந்து வந்து, நடுநிசியில் ஜனங்கள் எல்லோரும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தபோது யசோதையின் வடிவெடுத்துக் கொண்டு கோகுலம் புகுந்தாள். ( முன்பு பகவானால் ஏவப்பட்ட மாயை எல்லோரையும் தானே உறங்கச் செய்து வேற்றுருக் கொண்டு உள்ளே நுழைந்தது. இப்போதோ அப்பேய்ச்சி பிறரை உறங்கச் செய்ய இயலாததால் மற்றவர்கள் உறங்கும் நேரம் பார்த்து உள்ளே புகுந்தது.)

 

 1. ஸ்தன்யேந க்ருஷ்ண: ஸஹ பூதநாயா:

ப்ராணாந் பபௌ லுப்த புநர்ப4வாயா:

யத் அத்3பு4தம் பா4வயதாம் ஜநாநாம்

ஸ்தநந்த4யத்வம் ந புநர் ப3பூ4

 

பால் கொடுக்க வந்த பூதனையின் பாலைக் கண்ணன் பருகும்போது அத்துடன் அவள் ப்ராணனையும் உட்கொண்டான். கண்ணனை இல்லாதபடி செய்ய அவள் வந்தாள். அவளை கண்ணன் பிறவாதபடிக்கு செய்தான். தன்னை அழிக்க வந்தவளுக்கு மோக்ஷத்தை அளித்தான். (அவள் பால் கொடுத்ததால் இவனுக்கு தாயானாள். தாய்க்கு மகன் நன்மை செய்தான் எனக் கொள்ளலாம். பகைவரிடமும் சிறிது நன்மை வைத்து எல்லாம் அளிப்பவன் எம்பெருமான் என்கிற உண்மையை அறிபவருக்கு மோக்ஷம் என்பதாயிற்று.) (பொல்லா வடிவுடை பேய்ச்சி துஞ்ச புணர்முலை வாய்மடுக்க வல்லானை………… பெரியாழ்வார் (4-1-6)

 

பூதனா மோக்ஷம்

 

 1. நிசம்ய தஸ்யா: பருஷம் நிநாத3ம்

ரூக்ஷம் யசோதா3 ருதி3தம் ச ஸூநோ:

ஸ ஸம்ப்4ரமாவேக3ம் உபேத்ய பீ4தா

தம் அக்3ரஹீத்3 து­3ர்க்3ரஹம் ஆக3மாநாம் (ஸ்ரீமத் பாகவதம் 10/6/18)

 

யசோதை பூதனையின் கடுமையான அலறலையும், மகனின் அழுவதையும் கேட்டு அஞ்சி, பரபரப்பும் துணிவும் உடையவளாய், வேதங்களுக்கும் பிடிபடாத குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டாள்.

 

 1. நந்த3: ச தீவ்ரேண ப4யேந ஸத்4ய:

ஸமேத்ய பச்யந் அநக4ம் குமாரம்

தேநைவ தஸ்ய த்ரிஜகந் நியந்து:

ப்ராயுங்க்த ரக்ஷாம் பரமார்த்த2வேதீ(ஸ்ரீமத் பாகவதம் 10/7/12-17)

 

நந்தகோபனும் மிக்க பயத்துடன் உடனே வந்து குழந்தை குசலமாய் விபத்தின்றி இருப்பதைக் கண்டு மகிழ்ந்தான். ஆயினும் இதன் பின் என்ன நேருமோ என்றஞ்சி சாஸ்திரத்தில் நல்ல தெளிவு பெற்றிருப்பதால் காப்பு அனுஷ்டித்தான். ( உண்மையில் மூவுலகும் ஆள்பவனுக்கு அவனைக் கொண்டே காப்பு அனுஷ்டித்தான். நந்தன் சொல்லும் மந்திரங்களுக்கு எம்பெருமானே பொருளாகையால் அவனுக்கு அவனே காப்பன்றி வேறென்ன?) பெரியாழ்வார் 2/8/6 (கஞ்சன் கருக்கொண்டு நின்மேல் கருநிற செம்மயிர்ப்பேயை வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பதோர் வார்த்தையுண்டு )

 

 

 1. கோ3பாஸ் ச ஸம்பூ4ய கு3ஹோபமாக்ஷீம்

ஸ்வகோ4ஷ நிர்ஹ்ராதித விச்வகோ4ஷாம்

3தாஸும் ஐக்ஷந்த நிசாசரீம் தாம்

பீ4மாக்ருதிம் பை4மரதீ2ம் இவாந்யாம்

 

       கோபர்கள் எல்லாரும் கூடி, குகை போன்ற கண்களை உடையவளும், தன்னுடைய இரைச்சலாலே இடைச்சேரி முழுவதும் எதிரொலி ஏற்பட்ச் செய்தவளுமான பயங்கர உருவமுடைய உயிரிழந்த ராட்சஸியைக் கண்டனர். இதென்ன பைமரதி என்ற இரவோ என்று நினைத்தனர். பைமரதி என்பது 70 வது வயதில், 7வது மாதத்தில் 7வது இரவு. இது ப்ராணாபாயம் ஏற்படுத்தக் கூடியது. அவள் மரணித்ததால் ப்ராணாபாயம் நீங்கிற்று என்றும் கண்டம் நீங்கிற்று என்றும் மனதைத் தேற்றிக் கொண்டனர்.

 

 1. பரச்வதை4ஸ் தத்க்ஷண சாதிதைஸ்தாம்

விச்சித்4ய விந்த்4யாசல ஸாநுகல்பாம்

அந: ப்ரவ்ருத்யா ப3ஹிர் ஆசு நிந்யு:

க்ரவ்யாத்ப3லிம் ப்ராஜ்யம் இவ க்ஷிபந்த:

 

       கூர்மை நன்கு பெறுவதற்காக அப்போதே தீட்டப்பட்ட பல கோடாலிகளைக் கொண்டு விந்தியமலையின் அடிவாரம் போன்ற கெட்டியான அவளை பலவாகப் பிளந்து பல வண்டிகளில் ஏற்றி, மாமிசம் தின்கிற பக்ஷிகள் மிருகங்களுக்கு பலிகளை எறிதல் போல ஊருக்கு வெளியே கொண்டு போய்த் தள்ளினார்கள்.

 

 1. க்3ரஹாதிதோ3ஷாந் அபஹந்துகாமா:

கோ3ப்து: ஸதாம் கோ3பதய: ஸமேதா:

ஸுவர்ணஸூத்ர க்3ரதிதாபி4ராமாம்

பஞ்சாயுதீ4ம் ஆப4ரணம் ப33ந்து4:

பாலாரிஷ்டத்திற்கு காரணமான சில க்ரஹங்களால் ஏற்படும் தோஷத்தை நீக்க நினைத்து கோபர்கள் ஒன்று சேர்ந்து பொன்னில் கோர்த்த பஞ்சாயுதங்களை (பகவானுடைய ஸுதர்சன, பாஞ்சஜன்ய சார்ங்க கௌமோதக நந்தகங்களை) ஆபரணமாக அணிவித்தனர். (ஐம்படைத்தாலி அணிவித்தல் – பெரியாழ்வார் 1/3/5  எழிலார் திருமார்வுக்கு ஏற்கும் இவையென்று அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு)

 

 1. ரம்யாணி ரத்நாநி ரதா2ங்க3பாணே:

ஆகல்பதாம் நூநம் அவாப்நுவந்தி

தத் அங்க3 ஸம்ஸ்பர்ச ரஸாத் ப்ரகாமம்

ரோமாஞ்சிதாநி அம்சுக3ணைர் அபூ4வந்  (ரோமாஞ்சிதாந்யம்சுகணைர்)

 

       திருவாழிக்கையனான கண்ணனுக்கு அழகிய ரத்னங்கள் ஆபரணமாக அணிவிக்கப்பட்டு அவனுடைய திருமேனியின் சேர்க்கையாலே சிறந்த ஒளி பெற்றனவாகி அந்த திருமேனியின் ஸ்பர்சத்தில் ஏற்பட்ட ஸுகத்தினால் மயிர் சிலிர்த்ததோ எனும்படியான ப்ரகாசத்துடன் விளங்கின. (ரத்ன கிரணங்கள் மயிர் கூச்செறிதல் போல் குத்திட்டு நின்றனவோ?) (பாதுகா சஹஸ்ரம் பஹுரத்ன பத்ததி,) ரத்ன சாமான்ய பத்ததி 1 (481 வது ஸ்லோகம்)  பெருமாளின் திருவாபரண சௌந்தர்யத்தை ஸ்வாமி தேசிகன் முதல் சர்கத்திலும் விவரிக்கிறார். அவனாலே ஆபரணங்கள் திவ்ய சௌந்தர்யத்தை பெற்றன என்று………….)   

பெரியாழ்வார் (1/3/- மாணிக்கங்கட்டி)  (செங்கமலக்கழலில்………..2/5/10)

 

 

 1. சகடாசுர வதம்:

ஸ சாயித: க்ஷேமவிதா3 ஜநந்யா

பர்யங்கிகாயாம் ப்ரருத3ந் குமார:

சிக்ஷேப துங்க3ம் சகடம் பதா3ப்4யாம்

கா3டபி4கா4தேந கி3ரீந்த்3ரஸாரம்  (ஸ்ரீமத் பாகவதம் 10/7/7-11)

 

       குழந்தைக்கு நலமாக இருக்கும் என்பதை உணர்ந்து யசோதையினால் தொட்டிலில் இடப்பட்ட பிள்ளை அழுதுகொண்டே சிறந்த மலைபோன்ற உருவமுடைய உயர்ந்த சகடம் ஒன்றை கால்களால் தூரத்தில் விழும்படி கனமாக உதைத்துத் தள்ளினான்

(கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடியசகடமுடைத்து- பெரியாழ்வார் (2/4/4)

 

 1. விதா3ரிதஸ் தஸ்ய பதா3க்3ரயோகா3த்

விகீர்யமாணோ ப3ஹுதா4 ப்ருதி2வ்யாம்

சப்3தா3யமாந: சகடாக்ய தை3த்ய:

ஸங்க்ஷோப4யாமாஸ ஜக3ந்த்யபீ4க்ஷ்ணம்

       அந்த சகடன் என்ற அசுரன் குழந்தையின் கால்நுனி பட்ட மாத்திரத்திலேயே பிளவுண்டு பல சிதறலாகச் சிதறி பெருத்த ஓசையை உண்டுபண்ணி உலகங்களையெல்லாம் உலுக்கிவிட்டான். (நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே தாளை நிமிர்த்துச் சகடத்தை சாடிப் போய்……. பெரியாழ்வார் 1/2/11) நாராயணீயம் (42 வது தசகம் 10 வது ஸ்லோகம்)

      

 1. யத்3ருச்சயோத்க்ஷிப்தபதே3 குமாரே

சைலோபலக்ஷ்யே சகடே நிரஸ்தே

ஸரோஜ க3ர்ப்போ4பம ஸௌகுமார்யம்

பஸ்பர்ச தத் பாத3தலம் யசோதா3

 

       முன் யோசனையின்றி தற்செயலாக குழந்தை காலை எறிந்ததற்கே மலைபோன்ற சகடம் தள்ளப்பட்டு ஒழிந்தது. அதனைக்கண்ட யசோதா தாமரையின் இதழுக்கும் மேலான மென்மையுடைய குழந்தையின் உள்ளங்காலின் சிவப்பை உதைத்தனால் ஏற்பட்ட கன்னிச்சிவப்போ என்று தடவிப் பார்த்தாள். (கஞ்சன் தன்னால் புணர்க்கப்பட்ட கள்ளச்சகடு கலக்கழிய பஞ்சியன்ன மெல்லடியால் பாய்ந்தபோது நொந்திடுமென்று அஞ்சினேன் பெரியாழ்வார் 2/2/4)

 

 1. அதா2ங்க3ணே ஜாநுபதா3க்3ர ஹஸ்தை:

சக்ராயுதே4 சங்க்ரமணே ப்ரவ்ருத்தே

ப்ராயோ த4ரித்ரீ பரிஷஸ்வஜே தம்

ஸாபத்ரபா ஸாந்த்3ர ரஜஸ்சலேந

       சிலநாள் சென்றபிறகு கண்ணன், முழந்தாள், தாள்முனை, கை இவற்றைக் கொண்டு வாசலில் நடக்க முயன்றான். அப்போது அவன் மேனியெங்கும் அளைந்த புழுதியைக் காணும்போதெல்லாம், ஈதென்ன பூமியானவள் தன் பர்த்தாவை பகிரங்கமாக அணைய வெட்கமுற்று இப்படிச் செய்கிறாளோ எனும்படியாக அவன் மேனியெங்கும் புழுதி படிந்திருந்தது. ( பெரியாழ்வார் 1/7/9 வெண்புழுதி மேற்பெய்து…..)

 

 1. நிர்வ்யாஜ மந்த3ஸ்மித த3ர்சநீயம்

நீராஜிதம் குண்டல ரத்நபா4ஸா

நந்த3ஸ் ததா3நீம் ந ஜகா3ம த்ருப்திம்

முக்3தா4க்ஷரம் ப்ரேக்ஷ்ய முக2ம் ததீ3யம்

      

      

காரணம் ஏதுமின்றியும் கண்ணன் செய்யும் புன்முறுவலால் அழகுற்றும், காதில் இட்ட குழைகளில் உள்ள மணிகளின் ஒளியால் ஆரத்தியெடுக்கப் பெற்றதும் மழலையான அக்ஷரம் கொண்டதுமான குழந்தையின் முகத்தை கண்ட நந்தகோபன் திருப்தியடையாமல் முகத்தையே கண்டவண்ணம் இருந்தான்

 

 1. விச்வாநி விச்வாதி4க சக்திர் ஏக:

நாமாநி ரூபாணி ச நிர்மிமாண:

நாமைக தே3ச க்3ரஹணேபி மாது:

3பூ4வ க்ருஷ்ணோ ப3ஹுமாந பாத்ரம்

       உலகுக்கெல்லாம் மேலான சக்தியுடையவனாய் ஒருவனாகவே எல்லா உருவங்களையும் பெயர்களையும் உலகில் கொண்டவனான அப்பெருமான் தாய் யசோதையின் பெயரை முழுமையும் சொல்ல இயலாமல் தடுமாறியபோது (யசோதா என்னாமல் சோதா என்ற்படி) அதை எல்லாரும் கொண்டாட விளங்கினான்.

 

 1. தரங்கி3தா(அ)நுச்ரவ க3ந்த4ம் ஆதௌ3

தஸ்யாத்பு­4தம் ஸல்லபிதம் ஸகீ2பி4:

வர்ணஸ்வராதி வ்யவஸாய பூ4ம்நா

சிக்ஷாவிதா3ம் சிக்ஷணம் அக்3ர்யம் ஆஸீத்

 

முதலில் சொற்களைக் கற்பித்துவரும் தோழிகளோடு குழந்தை ஆச்சர்யமாய் வேதத்தின் மணம் வீசும்படி வரிசையாகச் செய்த உச்சரிப்பானது வர்ணம் ஸ்வரம் முதலிய மாத்திரைகள் வெகு ஸ்பஷ்டமாக தெளிவானதால் சிக்ஷிக்கும் தோழிகளுக்கு சிக்ஷை செய்து கொடுப்பதாய் இருந்தது.

 

 1. தம் ஈஷத் உத்தா2  நிலீநம் ஆராத்

ஸம்ப்ரேக்ஷ்ய த3ந்தாங்கு3ர சாருஹாஸம்

ஸநாதநீம் த்3ருஷ்டிம் அநந்ய த்3ருஷ்டி:

ஸாநந்தம் ஆலோகத நந்த3பத்நீ

எழுந்திருக்க முதலில் முயற்சி செய்கிறான். சிறிது எழுந்து உடனே கீழே உட்கார்ந்து தான் செய்யும் அபிநயம் பிற்ர்க்குத் தெரியாதென்று நினைத்து, கண்ணுக்கினிய சிறு முத்துப்போன்ற முளைப்பல்லால் அழகிய முறுவல் செய்யும் கண்ணனைக் (எல்லோருக்கும் சாச்வதமான கண்ணனை) வேறேதும் நோக்க இடமின்றி களிப்புடன் கண்டு வந்தாள் யசோதை. (செக்கரிடை நுனிக்கொம்பில் தோன்று சிறுபிறை முளைப்போல் நக்க செந்துவர்வாய்த்திண்ணை மீதே நளிர்வெண்பல் இளக………………………………..தளர்நடை நடவானோ பெரியழ்வார் 1/7/2)

 

 1. பதை3: த்ரிபி4: க்ராந்த ஜக3த்ரயம் தம்

4வ்யாசயா பா4வித பா3லபா4வம்

கரேண ஸங்க்3ருஹ்ய கராம்பு3ஜாக்3ரம்

ஸஞ்சாரயாமாஸ சநைர் யசோதா3

 

 

மூன்றடிகளால் மூவுலகு அளந்தவனை, உலக க்ஷேமத்திற்காக பாலகனாய் தோன்றியிருப்பவனை, அவனது செந்தாமரைக் கைநுனியைத் தன் கையால் பற்றிக்கொண்டு யசோதை மெதுவாக நடை கற்பித்தனள்.

 

 1. ஸ்கலத்க3திம் த்3வித்ரப33 ப்ரசாராத்

ஜாநுக்ரமே ஜாதருசிம் குமாரம்

பு4க்3நே ஸமாவேச்ய வலக்3நபா4கே3

ஸ்தந்யம் முதா3 பாபயதே ஸ்ம த4ந்யா

கண்ணனை களைப்பாற்றுதல்

       இரண்டு மூன்று அடிகள் வைத்தவுடனேயே அடிவைக்கத் தடுமாறி முழந்தாளிட்டுச் செல்வதிலே பரபரப்பு உடையவனான, கண்ணனை பரிவுடன் எடுத்து நுடங்கிய மருங்கில் வைத்துக்கொண்டு அம்மம் உண், நடக்கலாம் என்பவள் போல் ஸ்தந்ய பானம் பருகவைத்து பாக்யவதியானாள். (பஞ்சியன்ன மெல்லடி…………………முலையுணாயே ……… பெரி. 2/2/4)

 

 

21. க்ரமேண பூ4யோபி விஹாரகாங்க்ஷீ

    நந்த3ஸ்ய தா3ரைர் அபி4நந்த்4யமாந:

    நித்யாநுபூ4தம் நிக3மாந்த ப்4ருங்கை3

      நிஜம் பதா­3ப்3ஜம் நித3தே4 ப்ருதி2வ்யாம்

 

         மீண்டும் முன்போல நடக்க நோக்கு உடையவனாய் நந்தன் மனைவியாலும் ஆனந்தத்துடன் அனுமதிக்கப்பட்டவனாய்  வேதாந்தந்தங்கள் ஆகிற வண்டுகள் நித்தமும் தங்கி அனுபவித்துவரும் தன் திருவடித் தாமரையைப் பூமியில் வைத்து நின்றான்.

 

22. ஸ ஸஞ்சரந் ஸாது4ஜந ப்ரதீபை:

    மா பு4ஜ்யதாம் ஸேயமிதீவ மத்வா

    சக்ராதி3பி4: பாத3ஸரோஜ சிந்ஹை:

    ஆமுத்ரயாமாஸ மஹீம் அநந்யை:

 

         கண்ணன் தன் திருவடித்தாமரை பூமியில் பதிய நடக்க ஆரம்பித்தான். ஸஞ்சாரம் செய்கின்றவனாய் தன் திருவடித்தாமரையின் ரேகைகளால், அஸாதுக்களுக்கு ஆகாத  சங்கசக்ராதிகளாலே பூமிக்கு முத்திரையிடுகிறான். இந்த பூமி சாதுக்களுக்கு பகைவராயிருப்பவர் அனுபவிக்கலாகாது, இது என்னுடையது என்பதைக் குறிப்பிடுவது போல் அவன் தன் திருவடித்தாமரை முத்திரையைப் பதிக்கிறான். (ஒரு காலிற் சங்கு ஒரு காலிற் சக்கரம் உள்ளடி பொறிந்தமைந்த இருகாலும் கொண்டு அங்கங்கெழுதினாற் போல் இலச்சினைபட நடந்து……………பெரியாழ்வார் 1/7/6)

 

23.          ஆலம்ப்3ய மாது: கரபல்லவாக்3ரம்

சநை: சநை: ஸஞ்சரதோ முராரே:

3பா4ர சித்ராம் இவ பத்ரரேகா2ம்

4ந்யா பத3ந்யாஸமயீம் த4ரித்ரீ

 

   குழந்தையின் நுனிக்கையை தாய் பிடிப்பதற்கு மாறாக தாயின் நுனிக்கையைப் பிடித்துக்கொண்டு மிக்க மெதுவாக நடக்கும் பெருமானின் அடிவைப்புக்களை பூதேவியானவள் தனக்கு நாதன் விசித்ரமாக செய்யும் பத்ரரேகையாகக் கொண்டு  தன்யையானாள்.

 

24.          அகர்ம நிக்4நோ பு4வநாந்யஜஸ்ரம் (புவநாநி அஜஸ்ரம்)

ஸங்கல்பலேசேந நியம்ய தீ3வ்யந்

ப்ரசாரித:ப்ரஸ்நுதயா  ஜநந்யா
பதே3 பதே3 விச்ரமம் ஆசகாங்க்ஷே
    (பெரியாழ்வார் 2/2/9)

 

   கர்மங்களுக்கு கட்டுப்படாதவன் உலகங்கள் அனைத்தையும் அடிக்கடி தனது ஸங்கல்ப மாத்திரத்திலேயே நியமனம் பண்ணி வீறுடன் விளங்குபவன்,தாயின் கைகளைப் பற்றி நடை பழகுவிக்கப் பெறுபவனாய் ஒவ்வொரு அடியிலும் ஓய்வை விரும்பினான். (இவனது களைப்பை நீக்க நினைக்கும்போதெல்லாம் தாய்க்கு ஸ்தந்ய பானம் பெருகி வந்ததாம்)

 

 

 

25.          ஸுரப்ரஸூநைர் ஸுரபீ4க்ருதாநாம்

ஆரோஹணாந்யங்க3ண வேதி3காநாம்

தம் ஆருருக்ஷும் தரலாங்க்4ரி பத்மம்

தா4தாரம் ஆரோஹயத் ஆசு தா4த்ரீ

 

 

   தரையில் நடை பழக்கிவைத்தாள். மேடான ஸ்தானத்தில் ஏறவேண்டும் என்று அவனின் எண்ணத்தை உணர்ந்தவள் போல் கல்பவ்ருக்ஷங்களில் பூத்த மலர்களால் மணம் நிரம்பிய முற்றத்தில் இருக்கும் மேடைகளில், திண்ணைகளில் ஏறுவதற்கு அமைக்கப்பெற்ற படிகளில் ஏற விரும்பும் அவனுடைய தாமரையை ஒத்த எளிய மெல்லிய திருவடிகளை உடைய யசோதை ஏற்றுவித்தாள்.

 

26.          தலேஷு தஸ்யாங்க3ண பாத3பாநாம்

தாலாநுகூலேஷு க3தாக3தேஷு

வ்ரஜஸ்தி2தா: ஸ்வர்க3ஸதா3ம் அச்ருண்வந்

தூ3ரோதி3தாந் து3ந்து3பி4 தூர்யநாதா3ந்

 

   முற்றங்களில் பலவகையான அடர்ந்த மரங்கள். அடர்ந்த நிழல். அங்கு அற்புதமான கையொலிகள். அதற்கேற்ப கண்ணனின் கதிகள். இதைக் கண்டும் கேட்டும் மகிழ்ச்சியடைகின்றனர் கோபர்கள். ஆனால் ஒரு அதிசயம்! கண்ணனுடைய கதாகதிகளால் வானில் சஞ்சரிக்கும் தேவர்கள் மகிழ்ச்சியோடு தமக்கு வெற்றி கிடைத்துவிட்டது என்று துந்துபி வாத்யங்கள் வாசிக்கின்றனர். ஆனால் அவை வெகு தூரத்திலிருந்து கிளம்பும் ஒலியாதலால் கோபர்கள் பரமபோக்யமாக கேட்டு மகிழ்ந்தனர்.

 

27.          ய ஏஷ லோகத்ரய ஸூத்ரதா4ர:

பர்யாய பாத்ராணி சராசராணி

ஆநர்தயத்யத்பு43 சேஷ்டிதோஸௌ

நநர்த்த கேலம் நவநீதகாங்க்ஷீ

 

   மூன்று உலகங்களையும் ஆக்கி அளித்து அழித்து பெரியதொரு நாடக சூத்ரதாரனாயிருக்கும் இவன் பிரமன் முதலானோரையும் ஜங்கமஸ்தாவரங்களையும் ஆட்டிவைப்பவனும், அவற்றையே ஆட்டிப்படைப்பதாக செய்து வைப்பவனும் அத்புதமான லீலைகளை செய்பவனுமாய், தனக்கு நவநீதம் (வெண்ணெய்) வேண்டுமென்று ஆடினான். கோபஸ்த்ரீகள் ஆட்டத்தைக் கண்டு மகிழ்ந்து மேலும் நவநீதம் அளிப்பார்களே என்று கருதியதன் விளைவோ? (பெருமாள் திருமொழி 1/7/8)  (கோபால விம்சதி 4.)

 

 

28.          க்3ருஹேஷு த3த்4நோ மதந ப்ரவ்ருத்தௌ

ப்ருஷத்கணைர் உத்பதிதைர் ப்ரகீர்ண:

நிர்த3ர்சயாமாஸ நிஜாம் அவஸ்தா2ம்

ப்ராசீம் ஸுதா4சீகர யோக3 சித்ராம்

 

  

   

         க்ருஹங்களில் தயிர் கடைகின்றபோது அருகில் சிதறித் தெளிக்கின்ற தயிர்த்துளிகள் முகமெல்லாம் தெறிக்க அந்நுரைகள் முகமெல்லாம் படிந்து விளங்க தனது முந்தைய நிலையை, திருப்பாற்கடலை கடைந்தபோது தனது திருமேனி இப்படித்தான் விளங்கியது என்று காட்டுவான் போலும்.

 

29.          த்ரஸ்யந் முகுந்தோ3 நவநீத சௌர்யாத்

நிர்பு4க்3ந கா3த்ரோ நிப்4ருதம் சயாந:

நிஜாநி நிச்சப்333சாம் யயாசே

பத்3த்வாஞ்சலிம் பா3லவிபூ­4ஷணாநி

 

 

   முன் ஸ்லோகத்தில் ஆடும் ஆட்டத்தையும், அது அவனைக் காட்டிக் கொடுக்கும் நிலையும் வர்ணிக்கப்பட்டது. நடனமாடியும் நடக்கவில்லை. நவநீதமும் கிடைக்கவில்லை. வெண்ணெயில் ஆசை. அது முறையாக் கிடைக்கவில்லை. வேறு வழி. நவநீத சௌர்யம்தான். ஆனால் உடனே ஒரு பயம். உடலைக் குறுக்கிக் கொண்டு உறங்குவது போல ஒரு பாசாங்கு. ஆனால் தூக்கம் இல்லை. திருடனுக்கு பக்கத்திலேயே காட்டிக்கொடுப்பவர். அவர்களை சரிக்கட்ட வேண்டுமே. தான் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுக்க கூடாதே. உடலில் ஆபரணங்கள். சதங்கைகள். உடனே ஒரு யோசனை. அவைகளிடம் வேண்டிக் கொள்கிறான். அசேதனமான அவை எப்படி இவன் போக்குக்கு உடன்படும்? என்ன செய்வது? (கோபால விம்சதி 5)   பெரிய திருமொழி 10/7/3 வெள்ளிமலையிருந்தால் ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கிவிட்டு கள்வன் உறங்குகின்றான்……..)

 

 

30.          ஆரண்யகாநாம் ப்ரப4வ: ப2லாநாம்

அரண்யஜாதாநி ப2லாந்யபீ4ப்ஸந்

விஸ்ரம்ஸி தா4ந்யாஞ்சலிநா கரேண

வ்யாதா4த்மஜாம் விச்வபதி: ஸிஷேவே (ஸ்ரீமத் பாகவதம் 10/11/10)

 

   அரண்யத்தில் உண்டாகும் பயன்களுக்கெல்லாம் காரணமானவன் இப்போது ஆரண்யத்தில் உண்டான பழங்களை விரும்புகின்றவனாய் தன் சிறு கைகளில் தானியத்தை ஏந்தியவாறு ஒரு வேடுவச்சியிடம் அஞ்சலி செய்கிறான். சிறு கை. அள்ளிவந்த தானியங்கள் விரல் இடுக்கு வழியாக சிந்தியது போக சிறிதளவே மிச்சமிருக்கிறது. அதைக் காண்பித்து பண்டத்திற்கு பண்டம் கேட்கிறான். பலவகையான பழங்கள். நாவல், இலந்தை போன்றவை. வைகுந்தத்தில் கிடைக்காத பழங்கள். பதின்மூன்று வருடங்கள் காட்டில் இருந்தபோது ரசித்து ருசித்த பழங்கள். முன் அவதாரத்தில் சபரி தந்த பழங்களை ஏற்றவன். அந்த வாசனைதான் போலும் இப்போதும் வேடுவச் சிறுமியிடம் பழங்களை யாசிக்கிறான் போலும். ( இல்லம் புகுந்து என் மகளைக் கூவி கையில் வளையைக் கழற்றிக்கொண்டு கொல்லையில் நின்று கொணர்ந்து விற்ற அங்கொருத்திக்கு அவ்வளை கொடுத்து நல்லன நாவற்பழங்கள் கொண்டு நானல்லேன் என்று சிரிக்கின்றானே……………. பெருமானுக்கு நாவல் பழ்த்தின் மீதிருந்த ஆசையை பெரியாழ்வார் 2/9/10 அனுபவிக்கிறார்)

 

31.          ஸுஜாத ரேகாத்மக சங்க2சக்ரம்

தாம்ரோத3ரம் தஸ்ய கராரவிந்த3ம்

விலோகயந்த்யா: பலவிக்ரயிண்யா:

விக்ரேதும் ஆத்மாநம் அபூ4த் விமர்ச:

 

   நன்றாக அமையப் பெற்ற கோடுகளாகிய சங்க சக்ரங்களை உடையதும், சிவந்ததுமான அக்குழந்தையின் செந்தாமரையொத்த கைத்தலத்தைக் கண்டவுடன் பழம் விற்க வந்த அப்பெண்ணுக்குத் தன்னையே அக்குழந்தைக்கு விற்றுவிட வேண்டும் என்று தோன்றிவிட்டது. (மைத்தடங்கண்ணி யசோதை வளர்க்கின்ற சைத்தலை நீலநிறத்து சிறுபிள்ளை நைத்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலங்கள் வந்து காணீரே!)

 

32.          அபூரயத் ஸ்வாது32லார்ப்பணேந

க்ரீடாசிசோர் ஹஸ்தபுடம் கிராதீ

ரத்நைஸ்ததா3 கௌஸ்துப4 நிர்விசேஷை:

ஆபூரிதம் தத் ப2லபா4ண்டம் ஆஸீத் (ஸ்ரீமத் பாகவதம் 10/11/11)

 

 

   மிகவும் ருசியுள்ளதான பழங்களை அளித்தாள். விளையாட்டுப் பிள்ளையான கண்ணனுடைய கைகளைப் பழங்களால் நிரப்பிவிட்டாள். அப்போது பழம் வைத்திருந்த கூடையானது விலை மதிக்கமுடியாத, கௌஸ்துபத்திற்கு இணையான ரத்தினங்களால் நிரப்பப்பட்டுவிட்டது. இங்கு ஒரு பரம ரஹஸ்யத்தைக் காணலாம். தான்யத்திற்குப் பழங்கள். ஆனால் அப்பெண்ணின் மனோபாவம் கண்ணனை ஈர்த்தது. கை நிறைய கொடுக்கவேண்டும் என்று அவள் பழத்தை நிரப்பியதைக் கண்டான். அப்பொழுதுதான் இவன் ஸங்கல்பிக்கின்றான். பாத்திரத்தையே நிரப்பிவிட்டான். பெற்றது கொஞ்சம். அளித்ததோ அனந்தம். நாம் எம்பெருமானுக்கு கொடுப்பது கொஞ்சம்தான். ஆனால் அவன் நமக்குக் கொடுப்பதுதான் அனந்தம் என்ற அழகான நீதியையும் நமக்குப் புகட்டிவிட்டான்.

 

       தாமோதரபந்தனம்:  (ஸ்ரீமத் பாகவதம் 10/9/1-43)

 

33.          முஹு: ப்ரவ்ருத்தம் நவநீதசௌர்யே

வத்ஸாந் விமுஞ்சந்தம் அதோ3ஹகாலே

உலூகலே குத்ரசித் ஆத்தபுண்யே

3ந்து4ம் ஸதாம் ப3ந்து­4ம் இயேஷ மாதா 

 

   அடிக்கடி நவநீத சௌர்யத்தில் ஈடுபடுபவனும், சமயமல்லாத சமயங்களில் கன்றுக்குட்டிகளை அவிழ்த்துவிடுபவனும் ஸத்துக்களுக்கு பந்துவானவானை, மஹாபாக்யம் செய்திருந்த ஒரு உரலில் கட்டிவிட எண்ணினாள் யசோதை.  

(முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெயினோடு தயிரும் விழுங்கி கப்பால் ஆயர்கள் காவிற் கொணர்ந்த கலத்தோடு சாய்த்துப்பருகி………….பெரியாழ்வார் 3/1/5)

 

34.          ஆநீதம் அக்3ரே நிஜப3ந்த4நார்த்தம்

தா3மாகி2லம் ஸம்ஹிதம் அப்யபூர்ணம்

நிரீக்ஷ்ய நிர்விண்ணதி4யோ ஜநந்யா:

ஸங்கோச சக்த்யா ஸ ப3பூ4வ ப3ந்த்4ய:

 

தன்னைக் கட்டிப்போடுவதற்கு தன் முன்னிலையில் இணைத்துக் கொண்டு வரப்பட்ட அத்தனைக் கயிறும் தன்னைக் கட்ட போதுமானதாக இல்லாமல் செய்துவிட்டான். அப்போது சோர்வும் நிர்வேதமுமான நிலையினை அடைந்த தன் தாயினைப் பார்த்து தனது குறுக்கிக் கொள்ளும் திறமையினாலே கட்டுப்பட்டவனாக ஆனான். (பெரிய திருமொழி 10/6) ஆய்ச்சியர் சேரி அளைதயிர் பாலுண்டு பேர்த்தவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு வேய்த்தடந்தோளினார் வெண்ணெய் கொள்மாட்டாது அங்கு ஆப்புண்டிருந்தானால்…………………………..பெரியாழ்வார் 2/10/5) (கண்ணி நுண்……)

 

35.          3த்43ம் ததா2 பா4வயதாம் முகுந்த3ம்

அயத்ந விச்சேதி3நி கர்மப3ந்தே4

தபஸ்விநீ தத்க்ரதுநீதி: ஆத்4யா

ஸவ்ரீடம் ஆரண்ய கதா2ஸு தஸ்த்தௌ2

   கட்டுண்ட முகுந்தனை அவ்வாறே த்யானம் செய்கின்றவர்களுக்கு கர்மபந்தம் தானாகவே தளர்ந்து விடுகிறது. இவ்வாறு நிகழ்வது தத்க்ரது நீதிக்கு புறம்பானது. தத்க்ரது நீதி என்பது ஆரண்யகம் என்ற வேதபாகத்தில் உள்ளது. இந்த உலகில் எவனொருவன் எத்தகைய உபாசனத்தை செய்கிறானோ அவன் அதற்கேற்றவாறே மறுபிறவியை அடைகிறான். ஆனால் இவ்விஷயத்திலோ ஆதரம் இழந்த அந்த நீதி தவவேடம் பூண்டு காட்டில் ஒளிந்துவிட்டதாம். கட்டுண்ட கண்ணனை த்யானிப்பவர்களின் கர்மபந்தங்கள் அனைத்தும் அழிவதால் அவன் சரீரம் விடும்போது முக்தியை அடைவதால் இந்த நியாயம் பாதிக்கப்படுகிறது என்று கருத்து. முகுந்தனை உபாசிக்காமல் பத்த ஜீவனை, திருவில்லாத்தேவரை உபாசிப்பவர்கள் விஷயத்தில் இந்த நீதி வாழத்தான் செய்கிறது.

 

36.          உலூகலே ப்ரக்3ரதி2தேந தா3ம்நா

நிப3த்4தம் ஆஸ்ராவிலலோல நேத்ரம்

ஸஹாஸம் ஐக்ஷந்த ஜநாஸ் ஸமந்தாத்

ஆலாநிதம் நாக3மிவாநபி4க்ஞா: (நாகம் இவ அநபிக்ஞா)

 

 

 

   உரலில் நன்றாக கயிறு கட்டப்பட்டது. பின் அக்கயிற்றினால கண்ணன் இடுப்பில் கட்டப்பட்டான். அவனது கண்ணில் கண்ணீர் பெருகியது. கண்கள் கலங்கியிருந்தன. தற்யில் கட்டிவிட்ட யானையைப்போல இருக்கும் அவனை நாற்புறமும் சூழநின்று அனைவரும் பெருஞ்சிரிப்புடன் கண்டு மகிழ்ந்தனர். இவர்களுக்கு இவனது பெருமை கொஞ்சமும் தெரியாதன்றோ? (பெரிய திருமொழி 10/5/3)

 

37.          அநாத3ராக்ருஷ்டம் உலூக2லம் தத்

யாவர்ஜுநௌ சைலநிபௌ434ஞ்ஜ

3பூ4வதுர் ப்3ரம்ஹஸுதஸ்ய சாபாத்

முக்தௌ முநேர் யக்ஷவரௌ ததா3 தௌ  (நாராயணீயம் 46-ம் தசகம்)

   ஏனோ தானோ என்று இழுக்கப்பட்டது அவ்வுரல். அது இரட்டை மலை போன்றிருந்த அர்ஜுனமரங்களை அழித்ததோ, அவை ப்ரம்மகுமாரரான நாரதரின் சாபத்திலிருந்து விடுபட்டு யக்ஷர்களாகி விட்டனர். நளகூபரன், மணிக்ரீவன் என்ற குபேரனின் பிள்ளைகள் ஆடையில்லாமல் தடாகத்தில் நீராடிக்கொண்டிருந்தபோது அதைக் கண்ட நாரதர் வெகுண்டு அவர்களை மருதமரங்களாகும்படி சபித்தார். அவர்களை அழித்துவிடும் நோக்கில்லை அவருக்கு. அவர்களை அனுக்ரஹிப்பதற்காகவே சாபம் கொடுத்து விமோசனத்திற்கான வழியையும் அருளினார். கோபாலவிம்சதியில் யமலார்ஜுன த்ருஷ்டபாலகேஸம் என்கிறார் ஸ்வாமி தேசிகன். க்ருஷ்ணன் அங்கு எழுந்தருளியதும் தர்சன பாக்யமும் உரலை இழுக்கும்போது அவருடைய திருவடி சம்பந்தமும் கிட்டி முக்தியடைந்தனர் என்றே கூறலாம்.  (பெருமாவுரலில் பிணிப்புண்டிருந்து அங்கு இருமாமருதம் இறுத்த இப்பிள்ளை பெரியாழ்வார் 1/2/10)

 

38.          சாபாவதிம் ப்3ரம்ஹ ஸுதேந த3த்தம்

ஸம்ப்ராப்ய தௌ சௌரி ஸமாக3மேந

தே3ஹேந தி3வ்யேந விதீ3ப்யமாநௌ

ஸ்துத்வா ஹரிம் தா4ம ஸமீயது: ஸ்வம்

   ப்ரஹ்மாவின் குமாரரால் அளிக்கப்பட்ட சாப விமோசனத்தை சௌரியான பகவானின் சேர்க்கையால் அடைந்து திவ்யமான சரீரத்துடன் மிகவும் பொலிவு பெற்று ஹரியைத் துதித்துவிட்டு தமது லோகத்தை அடைந்தனர்.சாபம் கொடுத்தது பெரிதல்ல. சாபத்தின் முடிவுதான் சிறந்தது. ஆகவே சாபம் கொடுத்ததைத் தெரிந்து கொள்ளவேண்டும். கௌதமரின் சாபமும் இவ்வாறே ஆனது.    ஸம்ப்ராப்ய ஸம்ப்ராப்தி ஸம்-ப்ர-ஆப்தி . ஸ்வரூப ப்ராப்தி மிகவும் உயர்ந்தது. முன்னமே மரமாயிருந்து கண்னனைக் காணும் பாக்யம் பெற்றவர்கள்.

 

39.          அத்ருஷ்டபூர்வம் பு4வி பூதநாதே3:

உத3ந்தம் உத்பாதம் உதீ3க்ஷமாணா:

ஸமேத்ய கோ3பா: ஸஹ மாத4வேந

ப்3ருந்தா3வநம் ஸத்வரம் அப்4யக3ச்சந் (ஸ்ரீமத் பாகவதம் 10/11/27-35)

 

   உலகில் இதுவரை கண்டிராத பூதனை வதம் முதலானவை நடந்தாகி கதையாகி விட்டது. ஒன்றாக இருந்தால் பரவாயில்லை. மேன்மேலும் பல நடந்து அதிசயத்தையும் பயத்தையும் உண்டுபண்ணிவிட்டது. எனவே நந்த கோகுலத்தில் உள்ள கோபர்கள் ஒன்றாகச் சேர்ந்து இத்தகைய ஆபத்துக்களை எண்ணி தீர்மானித்தவர்களாய் மாதவனுடன் சேர்ந்து ப்ருந்தாவனத்திற்கு விரைவாகச் சென்றனர். இதுவரை அவர்கள் குடியிருந்த இடம் மஹத்வனம் எனப்பட்டது. கோ ஸம்ருத்தி இவர்களது செல்வமான படியால் இவர்கள் நகரத்திற்குச் செல்லாமல் மற்றொரு வனத்திற்குச் சென்றனர்.

 

40.          யேநௌஷதீ4நாம் அதி4பம் புரஸ்தாத்  (யேந ஔஷதி)

ஆஹ்லாதஹேதும் ஜக3தாம் அகார்ஷீத்

ஸ தேந த3த்4யௌ மநஸா வநம் தத்

        க்ருஷ்ணோ க3வாம் க்ஷேம ஸம்ருத்4தி3ம் இச்சந் 

                                                                                (ஸ்ரீமத் பாகவதம்  10/11/36)

 

   எந்த மனத்தினால் முன்பு உலகங்களை மகிழ்விக்கும் சந்திரனைப் படைத்தானோ அதே மனத்தினால் பசுக்களின் க்ஷேம ஸம்ருத்திகளை பெற விரும்பி அவ்வனம் வளம்பெற நினைத்தான்.

 

41.          அநுக்3ரஹாப்தே4: இவ வீசிபே4தை3:

ஆப்யாயயாமாஸ சுபை4ர் அபாங்கை4:

வநம் ப்ருதிவ்யா இவ யௌவநம் தத்

கோ3ப்தா ஸதாம் கோ34ந வம்சசந்த்3ர:

 

  ஸத்துக்களையெல்லாம் ரக்ஷிப்பவனான க்ருஷ்ணன் அனுக்ரஹம் என்பதொரு கடலில் இருந்து கிளம்பிய அலைகள் போன்ற தனது சுபமான பார்வையினாலே ப்ருத்வியின் யௌவனமோ என்றுவியக்கும் வகையில் அமைந்த அந்த வனத்தை கோப வம்சத்து சந்திரனான விளங்கி கோபாலனாக இருந்து போஷித்தான்.

 

42.          ஆஸீத் நிஷேவ்யா ப்ருதி2வீ பசூநாம்

புண்ட்ரேஷு ரம்யாணி த்ருணாந்யபூ4வந்

தஸ்மிந் அரண்யே தருபி4: ப்ரபேதே3

கல்பத்3ருமாணாம் அநுகல்பபா4வ:

 

 

  ப்ருந்தாவனத்தில் யௌவனம் தாண்டவமாடுகிறது என்று சொல்லப்பட்டது. அதிலும் பசுக்களுக்கு மிகவும் போக்யமான பூமியாயிற்று. இங்குள்ள புற்கள் கரும்புகளைப் போன்று மிகவும் சுவை பெற்றவைகளாயின. அங்குள்ள மரங்கள் கல்ப வ்ருக்ஷங்களையெல்லாம் பின்னடையச் செய்துவிட்டன.

 

43.          அத்3ருஷ்டபூர்வை: அதி4காம் விசேஷை:

ஆலக்ஷ்ய வந்யாம் அமரேந்த்3ர மாந்யாம்

நந்தோ3பநந்த­3 ப்ரமுகை2ர் நநந்தே3

நாகாதி4ரூடைர் இவ நாத2பூ­4ம்நா (thiruvaimozhi 10/3/10)

 

  ப்ருந்தாவனத்தின் வனப்பினை 3 ஸ்லோகங்களால் வர்ணிக்கிறார். யாரினுடைய க்ஷேமத்தைக் கருத்தில் கொண்டு ப்ருந்தாவனத்திற்கு வந்தனரோ அதில் கால்நடைகளுக்கு கிடைத்த சௌபாக்யத்தை விவரித்தனர். இப்போது இங்கு வரவேண்டும் என்று தீவிரமாக யோசித்து வருவதற்கு காரணமாயிருந்தவர்கள் அடையும் மகிழ்ச்சியை விவரிக்கின்றார். இதுவரை கண்டிராத பல விசேஷ சம்பவங்களாலும் தேவேந்திரனுக்கும் வியப்பினையும், மதிப்பினையும் அளிக்கின்றதான ப்ருந்தாவந சோபையைக் கண்ட நந்தன் உபநந்தன் முதலிய ப்ரமுகர்களுக்கு ஏற்பட்ட ஆனந்தம்  ஸ்வர்கலோகத்தில் உள்ளவர்களின் ஆனந்தம் போல் ஆயிற்று.

 

44.          தை3த்யைஸ் த்ருணாவர்த்த முகைர் அயத்நாத்

முஹுர் நிரஸ்தைர் முதி3தோ முகுந்த3:

அபு4ங்க்த ராமேண ஸஹாத்3பு4தம் தத்

புண்யம் வநம் புண்யஜநேந்த்3ர மாந்யம்

                 த்ருணாவர்த்தன்

 

  த்ருணாவர்த்தன் போன்ற அசுரர்கள் அடிக்கடி ஹிம்சித்தவர்கள் தனது பெரு முயற்சியில்லாமலேயே விளையாட்டாகவே அழிக்கப்பட்டு விட்டனர். முகுந்தனான கண்ணன் பெருமகிழ்ச்சியடைந்தான். குபேரனுடைய வனம் போல மதிக்கத்தக்கதும் புண்ணியமானதும் அற்புதமானதுமான அந்த ப்ருந்தாவனத்தை பலராமனுடன் சேர்ந்து அனுபவித்தான்.  (srimad bhagavadam  (10/12/ 13-28)

 

45.          ஸபக்ஷ கைலாஸ நிப4ஸ்ய கோ3பா:

3கஸ்ய பக்ஷாந் அபி4தோ ப33ந்து4:

வநே தத3ந்யாநபி கோ4ரவ்ருத்தீந்

க்ஷேப்தும் ப்ரவ்ருத்தா இவா கேதுமாலா: (srimad bhagavadam 10/12/48-51)

 

  இறக்கைகளுடன் கூடிய கைலாஸ மலைக்கு ஒப்பான பகாஸுரனின் நாரையின் சிறகுகளை எங்கும் கட்டிவைத்துவிட்டனர். இது அந்த காட்டில் வேறு கொடுமை செய்பவர்களை அல்லது கொடுமை செய்யும் ப்ராணிகளைத் தொலைத்துக் கட்டுவோம் என்று கூறும் கேதுமாலைகளாய் அவை விளங்கின. கேது என்பதற்கு கேடு என்று பொருள். கேடுகள் மேன்மேலும் வந்துவிடும். இங்கே வராதீர்கள். வந்தால் அழிந்துவிடுவீர்கள் என்று எச்சரிக்கை செய்வதற்காகவே அவ்வாறு செய்தனர் எனலாம். (பொங்கு புள்ளினை வாய்பிளந்த புராணர் தம்மிடம்.. பெரிய திருமொழி 1/8/1)   (புள்வாய் பிளந்த புனிதா திருமங்கை 7/1/4)

 

46.          புரஸ்க்ருதம் மங்களகீ3தவாத்4யை:

பும்ஸ: ப்ரஸ்த்யை ஜகதாம் ப்ரஸூதே:

கயாபி தத்ர ஸ்ப்ருஹயாந்வதிஷ்ட்டந்

கந்யாவ்ரதம் கிஞ்சந கோ3பகந்யா: (ஸ்ரீமத் பாகவதம் (10/22/1-6)

 

  மங்கள வாத்யங்கள் முழங்க, உலகத்துக்கெல்லாம் வித்தகனான பரம்புருஷனை மகிழ்விப்பதற்காக ப்ருந்தாவனத்து கோபகன்னிகைகள் அவர்களுக்கே சொல்லத்தெரியாததொரு ஆசையினால் கன்னி நோன்பினை அனுசரித்தனர்.  (தையொரு திங்கள்……….நாச்சியார் திருமொழி 1ஆம் திருமொழி) (திருப்பாவை 2 வையத்து)

 

வஸ்திராபஹரணம்: (நாச்சியார் திருமொழி 3ம்பத்து)

 

47.          நிசாத்யயஸ்தாந ஸமுத்4யதாநாம்

நிக்ஷிப்தம் ஆபீ4ர கிசோரிகாணாம்

கூலாத் உபாதா3ய து3கூலஜாலம்

குந்தா3தி4ரூடோ முமுதே3 முகுந்த3: (ஸ்ரீமத் பாகவதம் 10/22/9)

 

  உஷத்காலத்தில் நீராட முயன்ற அந்த இடையச்சிறுமிகள் வைத்திருந்த பட்டுப்பாவாடையை கரையில் இருந்து எடுத்துக்கொண்டு குந்தமரத்தின்(கதம்பமரம்) மீது அமர்ந்து மகிழ்ச்சியடைந்தான். (நாராயணீயம் தசகம் 60)

 

48.          ஸ சைகஹஸ்த ப்ரணதிம் விதூ4ந்வந்

க்ஷௌமார்த்திநீநாம் ஹரிரங்க3நாநாம்

அந்யோந்ய ஹஸ்தார்ப்பண ஸம்ப்ரவ்ருத்தம்

ஆஸாம் ஜஹாஸாஞ்சலிம் அப்யபூர்வம் (ஸ்ரீமத் பாகவதம் 10/22/22&23)

  அப்பெருமானும் ஒரு கையால் செய்யும் வணக்கத்தை நிராகரிக்கின்றவனாய் பட்டை வேண்டுகின்ற அந்த பெண்களின் ஒருவருக்கொருவர் கைகொடுத்தலால் ஏற்படும் கெட்டிக்காரத்தனமான அஞ்சலியையும் கண்டு சிரித்தான். கண்ணனையே வேண்டி விரதமிருந்தவர்கள் கண்ணனின் இச்செயலைக் கண்டு தங்கள் ஆடைகளையே வேண்டலாயினர். இங்கு தீக்ஷிதர் சற்று விரிவுபடுத்தியிருக்கிறார். அவர்கள் பட்டை நீரிலிருந்து கொண்டே வேண்டினரா? கரைக்கு வந்து வேண்டினரா? என்ற ஐயப்பாட்டினை ஏற்படுத்தியிருக்கிறார். ஜலாத் உத்தீர்த்த குந்ததலமாகத்ய என்கிறார். அதாவது எல்லோரும் நீரிலிருந்து தனித்தனியாகவோ கூட்டமாகவோ வந்து தத்தம் ஆடைகளைப் பெறலாம் என்பதாக விளக்கியிருக்கிறார். ஆனால் ஸ்ரீமத் பாகவதத்தில் சுகர் “கழுத்தளவு ஜலத்தில் நின்றவாறே வேண்டினர் என்கிறார். ஆண்டாளும் நீரில் நின்று அயர்க்கின்றோம்என்றே ப்ரார்த்திக்கின்றாள். ஆகவே மன்றாடி வேண்டிக்கொண்டது எல்லாம் நீரிலேயே. மேலும் ஒரு கையினால் மறைத்துக் கொண்டு மறுகையினால்  பிறருடைய ஒரு கையும் சேரும்போது அஞ்சலியாகும் அல்லவா? எப்படியாவது அஞ்சலி செய்து ஆடை கிடைக்க வேண்டுமே. இதைத்தான் ஆண்டாள் “தோழியும் நானும் தொழுதோம். பட்டைப் பணித்தருளாயேஎன்கிறாள்.

 

49.          ஸ சாத்ம சண்டாதக மாத்ரபாஜாம்

க்ஷௌமார்த்திநீநாம் ஸ்வயமர்த்யமாநை:

அநந்ய ஹஸ்தார்ப்பண ஸம்ப்ரவ்ருத்தை:

தாஸாம் ஜஹாஸாஞ்சலிபி4ஸ் ததீ3யை:

 

தமக்கு அரைச்சாத்து மட்டும் போதும்  என்பது போல் தம்மை தமது உடலாலேயே மறைத்துக்கொண்டு பட்டை வேண்டி நிற்கின்ற கோபஸ்த்ரீகள் தன்னால் கூறப்பட்டதற்கேற்ப பிறருடைய கைகள் கலக்காமலேயே செய்த அஞ்சலிகளால் தனக்கு வெற்றி கிடைத்துவிட்டது என்று நகைத்தான். பிறருடைய கைகளைக் கூட்டிக்கொண்டு அஞ்சலி செய்தால் பலன் யாருக்கு ஏற்படும்? ஏற்பட்டாலும் பாதி பாதியாகத்தானே கிடைக்கும்? அப்படிக் கிடைத்தாலும் எப்படி அமையுமோ? ஆகவேதான் பிறருடைய கைகளைக் கலக்காமல் அவரவர் அஞ்சலியைத் தான் ஏற்றுக்கொண்டான். (கோபால விம்சதி 20)

 

யௌவந பருவம் (50-60)

 

50.          ப்ரஸுப்தம் உத்3போ34யதா பரத்வம்

வீரச்ரியோ விப்4ரமமண்டநேந

நீலாதி3 நிர்வேச நிதா4ந தா4ம்நா

நாதோ ப3பா4ஸே நவயௌவநேந  (பெரியாழ்வார் 3ம்பத்து 4ம்திருமொழி)

  உறங்குகின்ற பரத்துவத்தை விழிப்புறச் செய்வதும் வீர்ய லக்ஷ்மியின் விளையாட்டிற்கு அணிகலன் ஆனதுமான நீளா முதலான கோபியர்களின் போகத்திற்கு நிதியென வைக்கப்பட்டதொரு புதுமையுடன் மிளிரும் யௌவனத்தினால் நாதன் மிகவும் ஒளி பெற்று விளங்கினான். இதற்கு முந்தைய 3 ஸ்லோகங்களில் வ்ரதத்தில் ஏற்பட்ட சிறு சிறு குறைகளையும் குற்றங்கலையும் அக்ற்ற எண்ணியும் அழகான பாணியில் அஞ்சலி வைபவத்தையும் அதன் சீர்த்தியையும் அழகாக எடுத்துரைத்தார். இச்ச்லோகத்தில் கன்யாவ்ரத்ம் இருந்த கன்னியரை அநுக்ரஹிப்பதற்கென்றே விலக்ஷணமான யௌவனத்தை பரிக்ரஹித்தார்.

 

 

 

51. விஹார பர்வக்ரம சாரு சௌரே:

    கல்யம் வய: காமக்3ருஹீதி யோக்3யம்

     மநீபி4: ஆஸ்வாத்4யதமம் ப்ரபேதே3

     மாது4ர்யம் இக்ஷோரிவ மத்4யபா43:

 

     இந்த ஸ்லோகத்தில் யௌவனத்தின் மிளிர்வு எவ்வாறு மனதைக் கவர்ந்தது என்று குறிப்பிடுகிறார். சூரனுடைய வம்சத்தில் உதித்த க்ருஷ்ணனின் விளையாட்டுக்களின் படிப்படியாக அழகின் இருப்பிடமானதும், காமன் பற்றிக்கொள்ள ஏற்றதுமான யௌவனம் கரும்பின் நடுப்பாகம் போல் மனதிற்கு பரமருசிகராமாயிருக்கும் பெருமையை பெற்றுவிட்டது.

 

52. ஸமாச்ரிதாநாம் விப்4ரம ஸைந்யபே4தை3:

     காந்த்யா ஸ்வயா கல்பிதசாருவப்ராம்

    வ்ரஜஸ்த்ரிய: க்ருஷ்ணமயீம் வ்யஜாநந்

     க்ரீடார்க3ளாம் க்ஷேமபுரீம் அபூர்வாம்

 

     விப்ரமங்களே ஸைந்யங்களாகின்றன. தனது மேனிப்பொலிவே அரணாயிற்று. விளையாட்டுக்களே அடித்தளமாயிற்று. கோகுலத்தில் உள்ள பெண்கள் க்ருஷ்ணமயமான இது அபூர்வமான க்ஷேமநகரம் என்று நன்கு அறிந்துகொண்டனர். விப்ரமம் என்ற புருவ நெறிப்பு முதலான சேஷ்டைகள் என்று பொருள்.

 

53. வம்சஸ்வநோ வத்ஸவிஹாரபாம்ஸு:

   ஸந்த்4யாக3ம: தஸ்ய ச வந்யவேஷ:

   ஆயாதி க்ருஷ்ணே வ்ரஜஸுந்த3ரீணாம்

   ஆஸீத் சதுஸ்கந்த4ம் அநங்க3 ஸைந்யம்

 

புல்லாங்குழல் ஓசை, கன்றுகளுடன் விளையாடும்பொழுது கிளம்பும் புழுதி, மாலையில் திரும்பும் கோலம், அவனுடைய காட்டுவாசி வேஷம் ஆகிய இந்நான்கும் மாலையில் கண்ணன் திரும்பும்போது கோகுல அழகிகளுக்கு நான்கு கூறுடைய மன்மதச் சேனையாக ஆகிவிட்டது. வம்ஸஸ்வனம், வத்ஸவிஹார பாம்ஸு, ஸந்த்யாகமம், வந்யவேஷம் ஆகிய நான்கும் மன்மதச்சேனையாக மாறிவிட்டது என்கிறார். பூணித்தொழிவினில் புக்குப் புழுதியளைந்த பொன்மேனி (பெரியாழ்வார் 2/4/9) காணப்பெரிதும் உவப்பன். மாலை வேளை. நீலமேகச்யாமளன். இவன் மீது சூரிய கிரணங்கள் படிகின்றன. கும்மாளத்துடன் வருவதால் புழுதியடைந்த பொன்மேனி. என்னே பொலிவு! ரகுவம்சத்தில் ரகு போருக்கு செல்லும்போது முதலில் ப்ரதாபம், பிறகு ஓசை, பிறகு புழுதி அதன்பின்னேதான் தேர் முதலியன என்கிறார் காளிதாசன். அதையேதான் இங்கு ஸ்வாமி விவரிக்கிறார். முதலில் ஓசை,பின் புழுதி,பின் அனுபவம், அதன் பின்னேதான் அவனுடைய திருக்கோலம்.

 

54.          அநுச்ரவாணாம் அவதம்ஸபூ4தம்

3ர்ஹாவதம்ஸேந விபூ4ஷயந்தீ

அதி3வ்யயா சர்மத்ருசைவ கோ3பீ

ஸமாதி4பா4ஜாம் அப4ஜத் ஸமாதி4ம்

 

 

       வேதங்களுக்கு சிரோபூஷணமாயிருக்கும் கண்ணனுக்கு மயில்தோகையை சிரோபூஷணமாக சூட்டி சமர்ப்பித்து அலங்கரிக்கின்ற ஒரு கோபஸ்த்ரீ சாதாரண கண்களாலேயே பார்க்கின்றவளாய் யோகிகள் அடையும் ஸமாதியைப் போல ஒரு யோக நிலையை அடைந்துவிட்டாள். அவனுடைய அழகினைப் பார்த்தவண்ணமே நின்றுவிட்ட நிலையை விளக்குகிறார்..

 

55.          கலாபிநாம் கல்பிதமால்யபா4வை:

பத்ரைஸ்ததா பத்ரலதே3ஹகாந்திம்

அவாப்ய ஸஞ்சாரி தமாலம் ஆத்4யம்

சாயாத்மதாம் ப்ராபு: இவாஸ்ய கா3வ:

 

       முந்தைய ஸ்லோகத்தில் மயில்தோகை சிரஸ்ஸில் தரித்திருக்க அதனால் ஈர்க்கப்பட்ட கோபஸ்த்ரீகள் வைத்தகண்ணை வாங்காமல் கல்லாய சமைந்துவிட்டனர் எனவும் அதனாலேயே எந்தச்சிரமமும் இன்றி யோகிகளின் நிலையை அடைந்துவிட்டதை விவரித்தார். இந்த ச்லோகத்தில் மயில்தோகையில் கண்போன்றதை அலங்காரத்திற்கு சாற்றிக்கொண்டிருக்கும் அழகை வர்ணிக்கிறார். பத்ரம் இலைகள், மயில்தோகைக்கும் அதே பெயருண்டு. முன்பே நீலமேகச்யாமளன் நடமாடும் தமாலமரம் போல காட்சியளிக்கிறான். இப்போதைய அலங்காரம் அவனுடைய சிறியதிருமேனியில் துளிர்விட்டமரம் போல தோன்றியது. அவனைப் பின்பற்றிச் செல்லும் பசுக்கள் அவனுடைய நிழலோ என்னலாம்படி பின் தொடர்ந்து சென்றன.

 

56.          விதந்வதா மாந்மதம் இந்த்3ரஜாலம்

பிஞ்ச்சேந தாபிஞ்ச்சநிபோ43பா4ஸே

அநேகரத்நப்ரப4வேந தா3ம்நா

சாராத்மநா சைல இவேந்த்3ரநீல:

 

 

மன்மதன் செய்யும் இந்திரஜாலமோ எனும்படியாக மயில் தோகை செய்யும் அதிசயத்தைக் கொண்டு பச்சிலைமரம் போல் காந்தியுடன் விளங்கினான். பலவிதமான ரத்தினங்களில் இருந்து உண்டாகும் விசித்திரமான ஒளியினால் இந்திரநீலக்கல் மலையோ எனும்படியாக விளங்கினான்.

 

57.          முஹு: ஸ்ப்ருசந்தீ முமுதே3 யசோதா3

முக்தா3ங்கநா மோஹந வாம்சிகேந

மநீஷிணாம் மாங்க3ளிகேந யூநா

மௌலௌ த்4ருதாம் மண்டநப3ர்ஹமாலாம்

 

       மையலேற்றி மயக்கவல்லதான புல்லாங்குழலுடையவனும், மங்களத்தை அனைவருக்கும் உண்டுபண்ணுபவனும் யௌவநம் உடையவனுமான கண்ணனால் சிரஸில் தரித்துக்கொள்ளப்பட்ட அழகான மயில்தோகை மாலையை யசோதை அடிக்கடி தொட்டுப்பார்த்து மகிழ்ந்தாள்.   

 

58.          க்ருதாஸ்பதா க்ருஷ்ணபு4ஜாந்தராலே

ப்ராலம்ப33ர்ஹாவலிர் ஆப3பா4ஸே

விசுத்43 ஹேமத்4யுதிர் அப்3தி4கந்யா

ச்யாமாயமாநேவ தத3ங்க3காந்த்யா

 

       கண்ணனுடைய திருமார்பில் இடம்பெற்ற மயில்தோகை மாலை பத்தரைமாற்றுத் தங்க ஒளிவுடைய திருவான கடல்மங்கை கண்ணனின் திருமேனி காந்தியால் கறுப்புநிறத்தனளாய் விளங்குவது போல் விளங்கியது. மயில்தோகை மாலையே லக்ஷ்மியைப்போல திருமார்பில் அமைந்து லக்ஷ்மீகரமாகவும் இருந்தது எனலாம்.

 

59.          ஸாசீக்ருதாநி ப்ரணயத்ரபாப்4யாம்

வ்யாவ்ருத்த ராஜீவநிபா4நி சௌரி:

ஸப்4ரூவிலாஸாநி த33ர்ச தாஸாம்

வக்த்ராணி வாசால விலோசநாநி

 

       காதலும் வெட்கமும் கலத்தலால் நேருக்கு நேராக இல்லாமல் குறுக்குபார்வையாலும் குனிந்த தாமரைமலரையொத்தவையுமான  புருவ வளைவுகளுடனும் பேசுகின்ற கண்களையுடையவையுமான அந்த கோபிகளின் முகங்களைக் கண்ணன் கண்டான். (பெரி.3/6/1)

 

60.          நிரங்குச ஸ்நேஹரஸாநுவித்4தா3ந்

நிஷ்பந்த3 மந்தா3லஸ நிர்நிமேஷாந்

வம்சேந க்ருஷ்ண: ப்ரதிஸம்ப3பா4சே

வார்த்தஹராந் வாமத்3­ருசாம் கடாக்ஷாந்

 

 

       தட்டுத்தடை ஏதுமில்லாத காதல் கவர்ந்ததும், அசையாமை, மந்தநிலை, சோம்பல், இமைகொட்டாமை ஆகியவற்றைக் கொண்டவையும், தூது கொண்டு வருபவையுமான கண்ணழகிகளின் கடாக்ஷங்களுக்கு குழல்கொண்டு ஊதி இசைவினைத் தெரிவிக்கும் பதிலை கண்ணன் அளித்தான்.

 

 

 

 

61.          அசிக்ஷிதம் தும்பு3ரு நாரதா3த்4யை:

ஆபீ4ரநாட்யம் நவமாஸ்திதேந

ஜகே3 ஸலீலம் ஜக3தே3கதா4ம்நா

ராகா3ப்3தி4நா ரஞ்ஜயதேவ விச்வம்  (பெரியாழ்வார் 3/6/5)

 

Sincere gratitudes to maaran’sdog.org)

       தும்புரு நாரதர் முதலிய கான சாஸ்த்ர நிபுணர்களாலேயே அறியமுடியாததும், இடையர்களுக்கே உரியதான புதுவகையான நாட்டியத்தை ஏற்றுக்கொண்டு விளங்குபவனும், ராகத்திற்கே பிறவிக் கடலானவனும், உலகத்தையே மகிழ்விப்பவனும், உலகத்துக்கெல்லாம் உறைவிடமானவனுமான கண்ணன் விளையாட்டாகப் பாடினான். (மதுசூதனன் வாயில் குழலின் ஓசை செவி பற்றி வாங்க நன்னரம்புடைய தும்புருவோடு நாரதனும் தன் வீணை மறந்து……………)

 

62.  அபத்ரபா ஸைகதம் ஆச்ரிதாநாம்

          ராகோ33தௌ4 க்ருஷ்ணமுகேந்து2 நுந்நே

          ஹஸ்தாவலம்போ3 ந ப3பூ4வ தாஸாம்

            உத்பக்ஷ்மணாம் உத்கலிகாப்லுதாநாம்  (பெரியாழ்வார் 3/6/2)

            கண்ணனின் முக்காந்தி என்கிற சந்திரனால் உந்தப்பட்டதான ராகமென்னும் கடலில் அலைகளால் வெட்கமென்னும் மணற்பரப்பில் உள்ள கோபிகைகள் மூழ்கிவிட்டனர். மேலும் திருமுக மண்டலமாகிற சந்திரனால் உந்தப்பட்ட அநுராகம் என்பதொரு கடலில் மூழ்கினவர்களும், கழுத்தினை மட்டும் மேலே தூக்கி நோக்குபவர்களும் கண்ணனையே கண்ணுற்றவர்களுமான கோபஸ்த்ரீகளுக்கு கைகொடுத்து கரைசேர்ப்பார் இல்லையாயிற்று.

 

 1. அயந்த்ரித ஸ்வைர க3திஸ் ஸ தாஸாம்

ஸம்பா4விதாநாம் கரபுஷ்கரேண

ப்ரஸ்விந்நகண்ட: ப்ரணயீ சகாசே

மத்2யே வசாநாம் இவ வாரணேந்த்ர:

 

எதற்கும் கட்டுப்படாத ஸ்வதந்த்ரமான கதியை உடைய கண்ணன் தாமரை மலரையொத்த தமது திருக்கரத்தினால் தொடப்பெற்றவர்களான அம்மங்கைகளின் நடுவில் அன்பனாய் வியர்த்த கன்னத்துடன் பெடைகளின் இடையே பெருவாரணம் போல் விளங்கினான். (பெரியாழ்வார் 3/6/3)

 

 1. விமோஹநே வல்லவ கே3ஹிநீநாம்

ந ப்3ரம்ஹசர்யம் பி3பி4தே3 ததீ3யம்

ஸம்பத்ஸ்யதே பா3லக ஜீவனம் தத்

ஸத்யேந யேநைவ ஸதாம்  ஸமக்ஷம்

 

முந்தைய ஸ்லோகத்தில் கோபஸ்த்ரீகளை பகவான் அனுக்ரஹித்த முறை கூறப்பெற்றது. அத்தனைப் பெண்டிரையும் அனைத்து அனுபவித்ததும், அதனால் அவர்கள் பெற்ற பாக்யத்தின் சிறப்பையும் இச்ச்லோகத்தில் விவரிக்கிறார். கண்ணனின் இந்த தாந்தோன்றித்தனமான வ்யாபாரம் உலகத்தின் பார்வையில் மிக மட்டமானதாகத் தெரிகிறதே. கோபிகளின் செயலும் சரியாகுமா? இதற்கு ஸ்வாமி இச்ச்லோகத்தினில் பதில் கூறுகிறார். அப்பைய தீக்ஷிதரின் விவரணத்தின்படி…….

           விமோஹநே வல்லவ கேஹிநீநாம் கோபர்களின் பார்யைகளை கண் விண் தெரியாமல் மோஹிப்பதில் என்று கொள்ளலாம். கோகுலத்தில் வாழ்கின்ற வயது வந்தபெண்டீரின் இந்த சம்போகத்தினால் அவனுடைய ப்ரஹ்மசர்யம் சிறிதும் பிளவுபடவில்லை. இது பின்னால் பாரதகாலத்தில் குழந்தையை உயிர்ப்பிப்பதில் தெளிவுபடுத்தப்பட்டது. இங்கு ஸ்ரீ பாகவதத்தில் உள்ளதை ஸ்வாமி தேசிகன் உறுதிபடுத்துகிறார். பரிக்ஷித்து கேட்கிறார். “ தர்மஸ்தாபனத்திற்காகவும், அதர்ம நிக்னத்திற்காகவும் வந்த பகவான் இங்ஙனம் விபரீதாசரணம் செய்வது சரியா? ஸ்ரீ சுகர் கூறுகிறார், மஹான்களின் இச்செயல்களைக் குறை கூறலாகாது. நெருப்பு போன்றவர்களுக்கு இது குறையாகாது. யாரும் இதை பின்பற்றலாகாது. எவனுடைய திருவடித்துகள்களால் பெருமை பெறுவரோ, யோகப் ப்ரபாவத்தினால் தொலைந்த கர்மபந்தங்களை உடையவர்களோ, முனிவர்களும் எவனுடைய த்யானத்தில் ஸ்வதந்த்ரமாக சஞ்சாரம் செய்வார்களோ, அவருக்கு பாவமோ பந்தமோ சொல்ல இடமில்லை. இடைச்சிகள், அவர்களுடைய பதிகள் யாராக இருந்தாலும், எல்லா ஜீவராசிகளிலும் எவன் வசிக்கிறானோ, அவனே இப்போது உடலை அடைந்து விளையாடுகிறான். இது அனுக்ரஹத்திற்கே. யாரும் இதை அனுபவித்து தத்பரமாக வேண்டுமேயன்றி குற்றம் குறை காணலாகாது.

       திரு வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமிகள் அனுசந்திக்கின்றபடி, கோபிகளின் இந்நிலை பரமபக்தர்களின் நிலைக்கு ஒப்பானது. விபவத்தில் எம்பெருமானை கணவனாக அடையும் நிலை அவர்களுக்கு இருந்தது. பெருமானை சேவிக்காவிட்டால் ஆன்மா நில்லாது என்ற நிலையை அவ்ர்கள் கொண்டிருந்தார்கள். அன்றியும் கர்மபரவஸர்களுக்குத்தான் இந்த சாஸ்திரம். அப்ராக்ருது நிலையில் இது பயன்படாது. இங்குள்ள கோபஸ்த்ரீகள் தெய்வாம்சம் பொருந்தியவ்ர்கள். தேவகுஹ்யமான விஷயங்களில் ஹேதுவாதம் எடுபடாது. இத்தனையும் நடந்தது இளமையில், பால்யத்தில், யௌவனம். உலகக்கண் கொண்டு இதை பார்க்க இயலாது. ஏழு வயதுக்கு முன்னமே இந்த லீலை. எதைக்கொண்டு வாதிக்க இயலும்? இங்கு ஸம்போகம் என்பது மனித இனம் பெறுவது போன்றதன்று. ஸர்வாத்மாவான பகவானுக்கு உலகமெல்லாம் சரீரம் ஆனபடியால் இவன் பிற சரீரத்தை அணைந்தான் என்பதே இல்லை. தன் சரீரத்தைத்தான் தால் ஆலிங்கனம் செய்துகொண்டான்.

              தர்மஸ்தாபனத்திற்காக அவதாரம் செய்த ஜனார்த்தனன் பரதார கமநம் செய்தது எப்படி ந்யாயமாகும் என்று பார்வதி பரமசிவனாரை கேட்டபொழுது  தனது சரீரத்தையே அணைக்கின்றபோது இது ரதியும் அல்ல, குற்றமும் அல்ல என்று கூறுகிறார், (பாத்மபுராணம் உத்தரகாண்டம் ஸ்வசரீர பரிஷ்வங்காத் ரதிர் நாஸ்தி வராநநே)

 1. ஸ்வஸம்ப4வம் க்ருஷ்ணம் அவேக்ஷமாண:

3ந்து4ப்ரஸூதம் ச ப3ம் வ்ரஜேச:

நிஸர்க3மைத்ர்யா நியதைகபா4வௌ

ந்யயுங்க்த தௌ வத்ஸகுலாநி கோ3ப்தும்

 

       க்ருஷ்ணனைத் தன் குமாரனாகவே பார்ப்பவரும் பலராமனைத் தன் பந்துவின் மகனாகப் பார்ப்பவருமான நந்தகோபன் ஸ்வபாவமாகவே நட்புடையவர்களும், ஒருமித்த கருத்துடையவர்களுமான க்ருஷ்ண பலராமனை கன்றுகள் மேய்த்துவரும் பணியில் அமர்த்தினார்.

கண்ணனைத் தன் மகனாகவே எண்ணியிருந்தார். தேவகிக்கும் வஸுதேவருக்கும் தன் ஸ்வரூபத்தைக் காண்பித்தார். யசோதைக்கு விஸ்வரூபத்தினைக் காண்பித்தார். கோபிகளுக்கோ ப்ரஹ்மபாவம். ஆனால் நந்தகோபருக்கு ஒரு வாய்ப்புமில்லை. ஆகவேதான் ஜயந்தீ ஸம்பவனை ஸ்வஸம்பவனாகவே எண்ணியிருந்தார்.

 

 1. அநந்யதந்த்ர: ஸ்வயமேவ தே3வாந்

பத்மாஸநாதீ3ந் ப்ரஜநய்ய ரக்ஷந்

ஸ ரக்ஷக: ஸீரப்4ருதா ஸஹாஸீத்

நேதா க3வாம் நந்த3 நியோக3வர்த்தீ (ஸ்ரீமத் பாகவதம் 10/11/37-38) 

 

       கண்ணன் ஸ்வதந்த்ரன். யாருக்கும் கட்டுப்படாதவன். பிரமன் முதலானோரைப் படைத்து அவர்களைத்தானே ரக்ஷிப்பவன். அத்தகைய ரக்ஷகன் நந்தகோபரின் நியமனத்தைப் பின்பற்றுபவனாய் கலப்பை ஏந்தி நிற்கும் பலராமனுடன் பசுக்களுக்கெல்லாம் தலைவனான்.

 

 1. கதம் வ்ரஜேத் சர்கரிலாந் ப்ரதே3சாத்

பத்3ப்4யாம் அஸௌ பல்லவகோமலாப்4யாம்

இதி ஸ்நுதஸ்தந்யரஸா யசோதா3

சிந்தார்ணவே ந ப்லவம் அந்வவிந்த3த்

சரளைக் கற்கள் நிறைந்த காட்டுப்பகுதியில் தளிர்போல் கோமளமான திருவடிகளால் எப்படி நடந்து செல்வான்? இவ்வண்ணம் நினைக்கும் ய்சோதை முலைப்பால் பெருக்கினால் நனைந்தவளாய் சிந்தைக்கடலில் விழுந்தாள். அங்கு அவள் கரை சேர்வதற்கு ஒரு படகும் இல்லை. (குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான் உடையும் கடியன ஊன்று வெம்பரற்களுடை கடிய வெங்கானிடைக் காலடி நோவ கன்றின்பின் கொடியேன் என் பிள்ளையைப் போக்கினேன் என்று பெரியாழ்வார் அனுபவிக்கிறார். பன்னிரு திங்கள் வயிற்றிற் கொண்ட அப்பாங்கினால் என்னிளங்கொங்கை அமுதமூட்டி எடுத்து யான் பொன்னடி நோவப் புலரியே கானில் கன்றின் பின் போக்கினேன் பெரியாழ்வார் 3/2)

 

 1. விஹார வித்ராஸித து3ஷ்டஸத்வௌ

ம்ருகே3ந்த்3ர போதௌ இவ தீ4ரசேஷ்டௌ

3பூ4வது: சாச்வதிகேந பூ4ம்நா

பா3லௌ யுவாநௌ இவ தௌ ப3லாட்யௌ

Thanks to blissfulkrishna.com

       தமது விளையாட்டினாலேயே துஷ்டமிருகங்களை விரட்டியடித்தவர்களும், சிங்கக்குட்டிகள் போன்ற தீரச்செயல்களை உடையவர்களும் அச்சிறுவர்கள் பலம் மிகுந்து விளங்கும் யுவர்கள் போல் பலசாலிகளாகத் திகழ்ந்தனர்.

 

 1. ஸிந்தூ3ரிதௌ வத்ஸபராக3ஜாலை:

ஸிதாஸிதௌ பா3லக3ஜௌ இவ த்3வௌ

உதா3ரலீலௌ உபலக்ஷ்ய கோ3ப்ய:

ஸர்வாஸ்ததா3 (அ)நந்யவசா ப3பூ4வு:

       கன்றுகளின் கால்தூசிகளால் சிவந்தனவையும், வெளுப்பும் கறுப்புமான யானைக்குட்டிகள் போல் விளங்குபவர்களும் கம்பீரமான விளையாட்டும் உடைய அவர்களை கோபிகள் அனைவரும் கண்ணுற்று அப்போது பிற எவருக்கும் அடங்காதவர்களாக ஆகிவிட்டனர். இருவரும் பாலகஜங்கள் போல இருந்தனர். (மதப்புனல் சோரவாரணம் பையநின்று ஊர்வதுபோல் என்று தள்ர்நடை அனுபவம். வெள்ளைப்பெருமலைக் குட்டன் மொடுமொடுவென விரைந்தோட  பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக்குட்டன் பெயர்ந்தடியிடுவதுபோல்……….)  அவர்களின் தீரச்செயல்களைக் கண்ட கோபியர் அவனுக்கு வசப்பட்டுவிட்டனர். பிற எதற்கும் வசப்படாதவர்கள் கண்ணனுக்கு வசமாகிவிட்டனர்.  வசா என்பது பெண் யானையைக் குறிக்கும். மதஜலம் பெருகும் ஆண் யானையைக் கண்ட பெண்யானை எந்தக்கட்டுக்கும் அடங்காமல் அதன் பின்னே செல்வது போல் கோபிகள் கண்ணனுக்கு வசப்பட்டனர். (பெரியாழ்வார் திருமொழி 3/4ம் திருமொழி)

 

 

 1. கோ3பாயமாநே புருஷே பரஸ்மிந்

கோ3ரூபதாம் வேத3கி3ரோ ப4ஜந்த்ய:

4வ்யைர் அஸேவந்த பத3ம் ததீ3யம்

ஸ்தோப4 ப்ரதிச்சந்த3 நிபை4ர் ஸ்வசப்3தை3:

 

       பரமபுருஷன் இடையர் வேஷத்தைக் கொண்டு விளங்கும்போது வேதங்கள் எல்லாம் பசுக்களின் உருவங்களை அடைந்தன. ஸ்தோபம் என்று எண்ணலாம்படியாக தமது குரல்களால் அவனுடைய திருவடியை அடிபணிந்து வந்தன. ஸ்தோபம் என்பது ஸாமவேதத்தில் கூறப்படும் ஒருவிதமான சப்தராசி.

 

 1. அபா3லிசோ பா3லிசவத் ப்ரஜாநாம்

ப்ரக்2யாபயந் ஆத்மநி பாரதந்த்ர்யம்

ந்யத3ர்சயந் விச்வபதி: பசூநாம்

3ந்தே4 ச மோக்ஷே ச நிஜம் ப்ரபு3த்வம் (ஸ்ரீமத் பாகவதம் 10/14/14)

 

(picture courtesy maaran’sdog.org)

       பாலன் அல்லாத அவன் பாலனாக உலகில் உண்டானவர்களுக்கு காட்சியளித்தான். தான் பிறருக்கு அதீனமானவன் என்பதை வெளிப்படுத்தினான். ஆனால் இவன் உலகநாயகன். பசுக்களைக் கட்டுவதிலும், அவிழ்த்துவிடுவதிலும் தனது ப்ரபுத்வத்தை வெளிப்படுத்தினான்.  (ப்ரம்மாவால் ஒளித்து வைக்கப்பட்ட பசுக்களையும் கன்றுகளையும் ஒரு வருஷம் கழித்துதான் அவிழ்த்து விட்டதையும் ப்ரம்மாவை சிக்ஷித்ததையும் பாகவதத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.)

 

 1. ஆத்மோபமர்தே3ப்யநு மோத3மாநாத்

ஆத்மாதி4கம் பாலயதஸ்ச வத்ஸாந்

கா3வஸ்ததா3நீம் அநகா4ம் அவிந்த3ந்

வாத்ஸல்ய சிக்ஷாம் இவ வாஸுதே3வாத்

       ஒன்றுக்கொன்று முட்டியடித்துக்கொண்டு தனது திருவடியை நெருக்கினாலும் அதைக் கொண்டாடி பெருமைப்படுகின்றவனும் தம்மைக்காட்டிலும் கன்றுகளின் மீது பாசம் கொண்டு பரிபாலிக்கும் வாஸுதேவனிடமிருந்து பசுக்கள் தூயதான வாத்ஸ்ல்யத்தைக் கற்று சிக்ஷை பெற்றன போலும். சிலசமயம் கன்றுகள் தம் தாயிடமிருந்து பால் குடிக்கும்போது  காம்பினைக் கடித்துவிடும்போது காலால் உதைத்து விலக்குகின்றனவும், தனக்குப் பசி எடுக்கும்போது கன்றுகளை சிறிதும் நினைக்காமல் மேய்கின்ற தாய்ப்பசுக்களைக் காட்டிலும் கண்ணனின் வாத்சல்யம் நன்று விளங்கியது.

 

 1. யோஸௌ அநந்த ப்ரமுகைர் அநந்தை:

நிர்விச்யதே நித்யம் அநந்தபூ4மா

வைமாநிகாநாம் ப்ரதமஸ்ஸ தே3வ:

வத்ஸைர் அலேலிஹ்யத வத்ஸலாத்மா

 

(picture courtersy. Maaran’s dog. Org)

       எவன் ஒருவன் அனந்தன் முதலான நித்யசூரிகளைக் கொண்டவனும் கணக்கில் அடங்காதவர்களாலும், எல்லையில்லாத மஹிமையை உடையவனாய் நித்யம் அனுபவிக்கப்படுகிறானோ எவன் ஒருவன் தேவர்களுக்கெல்லாம் ஆதியாய் விளங்குபவனோ அவன் வாத்ஸல்யம் என்பதொரு குணம் நிறையப்பெற்றவனாய் கன்றுகளாலும் நெருங்கி ஆஸ்வாதனம் பண்ணப்பெற்றான்.

 

 1. மஹீயஸா மண்டித பாணிபத்மம்

3த்4யந்நஸாரேண மதுப்லுதேந

த்3ருஷ்ட்வா நநந்து3: க்ஷுத4யாந்விதாஸ் தம்

வத்ஸாநுசர்யாஸு வயஸ்யகோ3பா:

 

Thanks to maaran’sdog.org)

       நித்யர்களால் பெரிதும் அனுபவிக்கப்பெற்ற கண்ணனை மாடு மேய்க்கும் தோழர்களான இடையர்கள் அனுபவித்து பெற்ற சௌபாக்யத்தினை விவரிக்கிறார். அலங்கரிக்கப்பெற்ற தாமரையையொத்த திருக்கரத்தினில் அதி உத்தமமானதும் தேன் கலந்ததுமான தயிர்சாதத்தினைக் கண்டு கன்றின் பின் வெகுதூரம் சென்று  களைத்துப் பெரும் பசியுடையவர்களான கோபர்கள் ஆனந்தம் அடைந்தனர். சுத்த சத்வமான அன்னம். தயிரும், பாலும், கன்னலும் தேனும் அமுதுண்ட பிரான் இன்று தயிரும் பாலும் வெண்ணெயும் மிளிர்ந்த அன்னத்தைக் கண்டு கண்ணன் தம் கையாலேயே அத்தகைய தத்யன்னத்தை தருவதை நினைத்து ஆனந்தமடைந்தனர்.

 

 1. ஸ்வாதூ3நி வந்யாநி பலாநி தைஸ்தை:

ஸ்நிக்3தைர் உபாநீய நித3ர்சிதாநி

ராமாய பூர்வம் ப்ரதிபாத்4ய சேஷை:

ஸ பிப்ரியே ஸாதர பு4ஜ்யமாநை:

கன்றுகள் மேய்த்து வரும்பொழுது காட்டில் உண்டான பலவிதமான பழங்களை அங்குள்ளவர்கள் அன்பு ததும்ப காண்பித்தனர். இது இனியதாயிருக்கும். இது அதை விட மதுரமாயிருக்கும் என்ற ரீதியில் அவர்கள் காண்பித்த பழங்களை பலராமனுக்கு கொடுத்துவிட்டுத் தாமும் உண்டு  கண்ணனும் களித்தான்.

 

 1. தாப்4யாம் ததா3 நந்த3நிதே3சிதாப்4யாம்

ரக்ஷாவதீம் ராமஜநார்த்தநாப்4யாம்

விசேஷபோ4க்3யாம் அப4ஜத் விபூ4திம்

ப்3ருந்தா3வநம் வ்யாப்ருததே4­நுப்3ருந்த3ம்

 

       நந்தகோபரின் கட்டளைப்படி பலராமனும் கண்ணனும் மாடுகள் மேய்த்துவரும்பொழுது சிறந்த பாதுகாப்பு ஏற்பட்டுவிட்டது. எங்கும் கூட்டம் கூட்டமாக பசுக்கள் நிறைந்த ப்ருந்தாவனம் தனித்த சிறப்பினையும் செல்வத்தையும் பெற்று விளங்கியது.

 

 1. அகா34காஸாரம் அஹீநசஷ்பம்

அதீக்ஷ்ணஸூர்யம் தத் அசண்டவாதம்

ப்ரச்சாய நித்3ராயித தே4நுவத்ஸம்

ப்ரௌடே நிதா3கே4பி ப3பூ4வ போ4க்யம்

 

       ஆழமான நீர் நிலைகளையுடையதும், புல் நிறைந்து எங்கும் பசுமையுடையதும், வெயில் காலத்திலும் சூரிய தாபம் தெரியாததும், புயல் காற்றேதும் இல்லாததும், எங்கும் பெரிய மரங்களின் நிழலில் உறங்குகின்ற பசுக்கூட்டங்களையும் கன்றின் கூட்டங்களையும் உடையதும், வறட்சியான காலத்திலும் போக்யமாக ப்ருந்தாவனம் விளங்கியது.

 

 1. ந வ்யாதி4 பீடா ந ச தை3த்யசங்கா

நாஸீத் க3வாம் வ்யாக்4ர ப4யம் ச தஸ்மிந்

ஸ்வபா3ஹுகல்பேந ப3லேந ஸார்த்த4ம்

நாராயணே ரக்ஷதி நந்த3லக்ஷ்மீம்

 

       தனது வலதுகரம் போல் பலராமனிருக்க நாராயணான கண்ணன் நந்தகோபரின் செல்வத்தை ரக்ஷிக்கிறபோது வ்யாதியினால் பீடையில்லை. அஸுரர்கள் ப்ரவேசிக்கும் பேச்சே இல்லை. பசுக்களுக்கு புலியினால் பயமே இல்லை என்பதாயிற்று.

 

 1. நிரீதயஸ்தே நிரபாயவாஞ்ச்சா:

நிஸ்ச்ரேயஸாத் அப்யதி4கப்ரமோதா3:

ப்ரபேதி3ரே அபூர்வயுகா3நுபூ4திம்

கோ3பாஸ்ததா3 கோ3ப்தரி வாஸுதே3வே

 

Our sincere gratitudes to totalbhakthi.com)

       அப்பொழுது வாஸுதேவன் ரக்ஷகனாக இருந்துவந்ததால் எத்தகைய ஈதி பாதைகளும் இல்லை. இயற்கையாகவே சில இன்னல்கள் ஏற்படுவதுண்டு. இவற்றை ஈதிபாதைகள் என்பர்.

1.ஈதி-ஆறுகள். அதிகமழை. மழையின்மை, அதிகமழை விளைச்சலைப் பாதிக்கும், மழையின்மை உற்பத்தியைப் பாதிக்கும். இது ஒருவேளை நன்றாக இருப்பினும்  விளைச்சலைப் பாதிக்கும் மூன்று 1) எலிகள் 2) வெட்டுக்கிளி, 3) கிளி. இவற்றிலிருந்து பயிர் தப்புவது கடினம். மூன்றாவது அரசன் சேனை அருகில் இருப்பது. அதுவும் அழித்து விடும். ஆனால் இந்த 6 ஈதிகளும் அங்கு ஏற்படவேயில்லை.  நினைப்பவை -யெல்லாம் கிடைத்து வந்தன. ஆசைகள் வீணாகவில்லை. மோக்ஷத்தைக் காட்டிலும் அதிக ஆனந்தத்தை அடைந்து வந்தனர். எந்த யுகத்திலும் இந்த பேறு இருந்ததில்லை.

 

 1. வத்ஸாநுசர்யா சதுரஸ்ய காலே

வம்சஸ்வநை: கர்ணஸுதா4ம் விதா4து:

3தாக3த ப்ராணத3சாம் அவிந்த3ந்

கோ3பீஜநாஸ் தஸ்ய க3தாக3தேஷு ( narayaneeyam  59 th dasakam)

 

       கன்றுகளை மேய்ப்பதற்கு கண்ணன் பின் தொடர்ந்து செல்லும்போது குழலை ஊதுவான். செவிக்கினியதாகவும் அமுதம் போன்றதுமான அவ்வொலியினால் கோபஸ்த்ரீகள் அவனுடைய கதாகதங்களில் போகும்போதும் வரும்போதும் ப்ராணன் போவதும் வருவதுமான நிலையை அடைந்தனர்.

 

81.    ஆக்4ராத வர்த்மாநம் அரண்யபா4கே3ஷு

ஆரண்யகை: ஆச்ரிததே4நுபா4வை:

கேநாபி தஸ்யாபஹ்ருதம் கிரீடம்

ப்ரத்யாஹரந் ப்ரைக்ஷத பத்ரிநாத:

 

பசுக்கள் கண்ணனின் மலரொத்த திருவடிகள் படிந்த வழியை திருவடி பட்டதால் மேலும் வேதமணம் வீசும் இடங்களை முகர்ந்து கொண்டு அவன் பின்னே சென்றபோது முன்பு விரோசனனால் கவர்ந்து செல்லப்பட்ட க்ரீடத்தை ஸமர்ப்பிப்பதற்காக வந்த கருத்மான் கண்ணனைக் கண்டார். அரண்யம் காட்டுப்பாகம் , அரண்யம் ஓதவேண்டிய வேத பாகங்களில் எனவும் கொள்ளலாம். கோபால விம்சதியில் நிகமாந்தைர் அபி நாபி ம்ருக்யமாணம் என்கிறார், வேதாங்தங்கள் இன்னும் தேடிக் கொண்டு இருக்கின்றன. அத்தகையவனை உபநிஷத்துக்கள் பசு உருவம் கொண்டதால் அவனின் சேவையாயிற்று என்கிறார். வழியோடு தானே அவனைப் பார்க்கவேண்டும். அதனால் அவன் நடந்த வழிகளை மோப்பம் பிடித்து அவனைக் கண்டு கொண்டு விடுகின்றன.

 

கேநாபி எவனாலோ திருடப்பட்ட க்ரீடம். க்ரீடம் திருடப்படும்போது அவன் கண்ணனாக இருக்கவில்லை. அவன் ஹரியாக இருக்கும்போது களவு போனது

புராண ப்ரஸித்தம். அதைத் திரும்பிக் கொண்டு வரும்போது கருடன் கண்ணனைக் கண்டார் என்கிறார் ஸ்வாமி. கருடன் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் பசுக்கள் தரையில் மோப்பம் பிடித்து செல்வதை அறிய இயலும். ப்ருந்தாவனமே வேதம். பசுக்களே உபநிஷத்துக்கள். கண்ணனே பரதேவதை. ஆதலால் க்ரீடம் அவனுடையதே என்று வேதஸ்வரூபியான கருடன் கண்டார்.

 

Peruman in vairamudi sevai

(thanks to sri. S. sampathkumar)

82.    தே3வஸ்ய து3க்3தோ43சயஸ்ய தை3த்யாத்

வைரோசநாத் வ்யாலபு4ஜோபநீத:

க்ருஷ்ணஸ்ய மௌலௌ க்ருதப3ர்ஹசூடே

ந்யஸ்த: கிரீடோ நிபிடோ ப3பூ4

 

       திருப்பாற்கடலில் பெருமான் யோகநித்திரையில் ஆழ்ந்திருந்தபோது எம்பெருமானுடைய க்ரீடமானது ப்ரஹ்லாதனின் புதல்வனான விரோசனனால் அபகரிக்கப்பட்டது. பாம்புகளை விரும்பும் கருடன் இதை எப்படியோ கண்டுபிடித்து திருப்பி எடுத்துக்கொண்டு வந்தார். அழகாக மயில் தோகை அணிந்திருக்கும் கண்ணனின் ஸிரஸ்ஸில் சூட்டினார். அந்த க்ரீடம் அவருடைய அவருக்கு ஏற்றவாறு அழுத்தமாக பொருந்திவிட்டது. (கருட பஞ்சாசத் 49வது ஸ்லோகம் கருடனின் ப்ரபாவத்தை விளக்குகிறது).

 

83.    ஸமாஹிதை: அக்3நிஷு யாயஜூகை:

ஆதீ4யமாநாநி ஹவீம்ஷு போ4க்தா

4க்தைகலப்4யோ ப4கவாந் கதா3சித்

பத்நீபி4ர் ஆநீதம் அபு4ங்க்த போ4ஜ்யம் (srimad bhagavatham 10/23/1-52)

(Thanks to maransdog.org)

       ஒன்றிய மனதுடையவர்களால் செய்யப்படும் யாகங்களில் இடப்படும் ஹவிஸ்ஸுக்களை உண்பவன். பக்தர்களுக்கே எளியனாய் இருக்கும் பகவான் ஒரு சமயம் ப்ராஹ்மண பத்னிகள் கொண்டுவந்து ஸம்ர்ப்பித்த உணவினை உட்கொண்டான்.  (narayaneeyam – 69th dasakam)

 

84.    கராம்புஜ ஸ்பர்ச நிமீலிதாக்ஷாந்

ஆமர்சநை: ஆகலிதார்த்4த நித்3ராந்

வத்ஸாந் அநந்யாபிமுகாந் ஸ மேநே

ப்ரஹ்வாக்ருதீந் ப4க்திபராவநம்ராந்

 

       தனது கைகள் படுவதால் ஸுகத்தை அனுபவித்தவாறே கண்களை மூடியிருப்பவைகளும், கைகளால் தடவிக் கொடுப்பதால் பாதி உறக்கமுடையவைகளும் , தன்னையே நோக்கியவண்ணம் படுத்திருப்பவையுமான கன்றுகளை பக்தி நிறைந்து வணங்குகின்றனவோ என்று கண்ணன் எண்ணினான்.

 

85.    ரோமந்த2 பே2நாஞ்சித ச்ருக்விபா4கை3:

அஸ்பந்த3நைர் அர்த்த4 நிமீலிதாக்ஷை:

அநாத்3ருத ஸ்தந்யரஸைர் முகுந்த3:

கண்டூதிபி4ர் நிர்வ்ருதிம் ஆப வத்ஸை:

 

       அசைபோடுவதால் நுரைகள் தங்கும் உதடுகளையும் அசையாமல் படுத்திருப்பவையும் பாதி மூடிய கண்களையுடையதும் பால் குடிக்கவும் விருப்பமில்லாமல் கண்ணனுடைய சொரிதலால் தனித்த இன்பத்தை அடைபவையுமான கன்றுகளால், கன்றுகள் போலே தானும் சுகத்தை அடைந்தான். (கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக் கவிழ்ந்திற்ங்கி செவியாட்டகில்லாவே)

 

86.    ஸிஷேவிரே சாத்வலிதாந் ப்ரதே3சாந்

க்ருஷ்ணஸ்ய தா4ம்நா மணிமேசகேந

வஸுந்த4ராயாம் அபி கேவலாயாம்

வ்யாபாரயந்தோ வத3நாநி வத்ஸா:

 

       கண்ணனின் திருமேனி ஒளி தரையெங்கும் படுகின்றது. தரையெங்கும் புற்களோ எனும்படி அமைந்துவிட்டது. கண்ணனுடைய நிறம் இந்திர நீலமணியின் தேஹகாந்திதானே. மரகதப்பச்சை என்றும் கொள்ளலாம்.  அதனால் சுத்தமான தரையில் இவனுடைய நிறம் பளிங்குபோல் மின்னுகிறது. அதனால் கன்றுகள் புற்கள் அடர்ந்திருக்கின்றன என தரையெங்கும் வாய் வைத்தபடி செல்கின்றன. (பாதுகா ஸஹஸ்ரம் மரதக பத்ததி 8 (668) 11(671)

பாதுகையே ! நீ சிவனால் தரிக்கப்படும் சமயம் உன் மரகதத்தின் ஒளியால் அவை அருகம்புல்லோ என நினைத்து சிவனின் மான்குட்டி மேயக் கருதுகிறது).

 

87.    நவ ப்ரஸூதா: ஸ ததா3 வநாந்தே

பயஸ்விநீ: அப்ரதிமாந தோ3ஹா:

பரிப்4ரமச்ராந்த பதா3ந் அதூ3ராத்

ப்ரத்யாக3தாந் பாயயதே ஸ்ம வத்ஸாந்

       அன்று ஈன்ற கன்றுகளுடைய பசுக்கள் வெகு தூரம் செல்ல இயலாமல் அருகிலேயே மேய்ந்துவிட்டு நடக்க இயலாமல் மடி நிறைந்த பாலுடன் அதன் சுமையைத்தாங்க மாட்டாமல் வீடு திரும்புகின்றபொழுது அவற்றைக் கறக்கவிடாமல் அங்குமிங்குமாக ஓடி விளையாடி கால்சோர்ந்து வீடு திரும்புகின்ற கன்றுகளையே ஊட்டச்செய்தான் கண்ணன். (மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்)

 

88.    நிவிஷ்ய மூலேஷு வநத்3ருமாணாம்

நித்3ராயிதாநாம் நிஜதர்ணகாநாம்

அங்கா3நி கா3: ஸாத3ரம் ஆலிஹந்தீ:

அமம்ஸ்த ஸம்பா4வ்யகு3ணா: ஸ்வமாது:

 

       வனங்களில் உள்ள வனஸ்பதிகள் வானளாவியவை. அவற்றின் அடிப்பாகங்கள் எப்பொழுதும் அகலா நிழல் பெற்று விளங்கும்.  அந்த நிழல்களில் அன்று ஈன்ற கன்றுகள் உறங்குகின்றன. அவற்றைக் கறவைக்கணங்கள் தம் நாவினால் நக்குகின்றன. என்ன ஆதுரம் அந்த பசுக்களுக்கு! உறுப்புகள் வலுவடைய அவை நக்குவது இயற்கையாயினும் தன் தாய் தன்னிடம் காட்டிவரும் அன்பிற்கு அவை ஒப்பானதே என்று கண்ணன் கருதினான்.

 

 

89.    ஸ நைசிகீ: ப்ரத்யஹம் ஆதபாந்தே

ப்ரத்யுக்தகோ4ஷா இவ வத்ஸநாதை3:

மதூ4நி வம்சத்4வநிபி4: ப்ரயச்சந்

நிநாய பூ4யோபி நிவாஸபூ4மிம்

       தினந்தோறும் மாலை வேளையில் குழலூதியே வீடு திரும்புகிறான் கண்ணன்.  அக்குழலோசையின் இனிமையால் உந்தப்பட்டு கன்றுகள் வீட்டிற்கு அருகில் கத்திக்கொண்டு வரும்போது வீட்டில் அடைபட்டிருக்கும் கன்றுகளும் எதிர்த்துக் கூச்சலிட குழலோசை அமுதமாகப்பாய உத்தமமான பசுக்களை மறுபடியும் கொட்டகைக்கு கொண்டு வந்து சேர்த்தான்.

 

90.    ஸ மா வ்ரஜந் விச்வபதி: வ்ரஜாந்தம்

கோ3பி4: ஸமம் கோ3பவிலாஸிநீநாம்

உல்லாஸஹேது: ஸ ப3பூ4வ தூ3ராத்

உத்யந் விவஸ்வாந் இவ பத்மிநீநாம்

Thanks to maransdog.org

       விச்வங்களுக்கெல்லாம் பதியானவன், வ்ரஜத்தின் அருகில் வருபவனாய் பசுக்களுடன் திரும்பிவரும்பொழுது ஆயர் மங்கையர்க்கு மிகுந்த உல்லாஸத்தை முகமலர்ச்சியை தூரத்திலிருந்தே அளித்தான். இது கதிரவன் உதயமாகும்போது தாமரையோடைகள் ஒரு வகையான புத்துணர்வை அடைவது போல் இருந்தது.  (வ்ரஜம் ப்ருந்தாவனம், கோகுலம், மஹத்வனம் பாண்டீரவனம் முதலான மதுராவின் அருகில் உள்ள பகுதிக்கு வ்ரஜம் என்று பெயர். 84 சதுரமைல்கள் கொண்ட அப்பகுதியை வ்ரஜபூமி என இன்றும் அழைக்கின்றனர். வ்ரஜம் என்றால் ஸஞ்சரித்த பகுதி எனவும் கொள்ளலாம். கம்ஸபயத்தினால் நகரமே நகர்ந்தவண்ணம் இருந்தபடியால் இப்படியாகும்.

 

91.    நிவர்த்தயந் கோ3குலம் ஆத்தவம்ச:

மந்தா3யமாநே தி3வஸே முகுந்த3:

ப்ரியாத்3ருசாம் பாரணயா ஸ்வகாந்த்4யா

3ர்ஹாவ்ருதம் வ்யாதநுதேவ விச்வம்    (வ்யாதநுத இவ)

       புல்லாங்குழலை கையில் ஏந்திய வண்ணம் ஆவினங்களை மாலை வேளையில் திருப்பி அழைத்துவந்தான். கண்ணனிடம் மாளாத காதல் கொண்ட பெண்டிரின் பட்டினிக் கிடந்த கண்களுக்கு பாரணை போல் அவனது திருமேனி காந்தியைக் கண்டு களித்தனர். தனது திருமேனிப்பொலிவினால் இந்த உலகினையே மயில்தோகை கவ்வியதோ எனும்படியாக அவனது திருமேனி காந்தி பரவியதுபோல் ஆயிற்று. (முது துவரைக் குலபதியாக் காலிப்பின்னே இலைத்தடத்த குழலூதி ஆயர்மாதர் இனவளைக் கொண்டான். பெரிய திருமொழி 6/6/7)

 

92.    பா3லம் தருண்யஸ் தருணம் ச பா3லா:

தம் அந்வரஜ்யந்த ஸமாநபா4வா:

தத் அத்3பு4தம் தஸ்ய விலோப4நம் வா

தஸ்யைவ ஸர்வார்ஹ ரஸாத்மதா வா

 

       பாலனான கண்ணனை நல்ல யௌவனப் பெண்களும் நல்ல யௌவனமுடைய கண்ணனிடம் சிறுமிகளும் ஒரே விதமான மனோபாவத்துடன் ஈடுபட்டனர். இது அத்புதம். வயதானவர்கள் அவனிடம் காதல் கொள்வது அல்லது வயது வராதவர்கள் அவனைக் காதலிப்பது என்பது அதிசயம். இது அவன் ஏமாற்றுவதா? அல்லது அவனே ஆளுக்குத்தக்கவாறு ரஸமாக மாறுவதா?

 

93.    அவேதி3ஷாதாம் ப்ருது2கௌ பித்ருப்4யாம்

தாருண்யபூர்ணௌ தருணீஜநேந

வ்ருத்4தௌ புராவ்ருத்த விசேஷவித்3பி4:

க்லுப்தேந்த்ர ஜாலௌ இவ ராமக்ருஷ்ணௌ

 

       தாயும் தந்தையும் இவர்களை குழந்தைகள் என எண்ணினர். யுவதிகளால் யுவாக்களாக அறியப்பட்டனர். அவதார விசேஷ ரஹஸ்யங்களை முன்னோர் வாயிலாக கேட்டுணர்ந்தவர்களால் பெரியோர்கள் என்று அறியப்பட்டனர். இவ்விருவரும் (பலராமன், க்ருஷ்ணன்) இருவரும் இந்திரஜாலக்காரர்கள் போல உணரப்பட்டனர். இங்கு பெண்டிர் மட்டுமன்றி அங்குள்ளவர் அனைவரும் தாம் கண்டுகொண்ட வகையை கூறுகின்றார். ஒருவனையே பலவிதமாக நினைப்பதும், அவரவர் தாம் அறிந்த வண்ணம் அனுபவிப்பதும் இயற்கை. எந்த வகையில் தன்னை அவன் காட்டிக் கொடுத்தானோ அவ்வகையில் தானே அவனை அனுபவிக்க இயலும். இங்கு கௌமாரம், யௌவனம் ஜரா ஆகிய மூன்று நிலைகளும் ஒருவரிடமே ஒரே சமயத்தில் சேர்ந்தது என்னே என்று விவரிக்கிறார். (மையார் கண் மடவாய்ச்சியர் மக்களை மையன்மை செய்து அவர் பின் போய்………………….உன்னை என் மகன் என்பர் )

 

94.    அதா2பதா3நம் மத3நஸ்ய தா3தும்

ஆதா3தும் ஆலோகயதாம் மநாம்ஸி

நவம் வயோ நாத2ஸமம் ப்ரபேதே3

கு3ணோத்தரம் கோ3பகுமாரிகாபி4:

 

       மன்மதனுக்கு ஒரு பராக்கிரமத்தை அளிக்கவும், பார்ப்பவர்களின் உள்ளங்களைக் கவர்ந்திடவும், நாதனுக்கு ஏற்ப கோபிகள் பல குணங்களால் சீரியதான புது வயதினை, யௌவனத்தை அடைந்தனர்.

 

95.    அநங்க3ஸிந்தோ4: அம்ருத ப்ரதிம்நா

ரஸஸ்ய தி3வ்யேந ரஸாயநேந

மஹீயஸீம் ப்ரீதிம் அவாப தாஸாம்

யோகீ3 மஹாந் யௌவந ஸம்ப4வேந

 

       மஹா யோகியான க்ருஷ்ணன் ஆயர் சிறுமிகளின் யௌவன சேர்த்தியால் பெரு மகிழ்ச்சி அடைந்தான். திருப்பாற்கடலில் அமுதம் சிறந்தது போல் காம ஸாகரத்தில் ச்ருங்காரம் ஏற்றம் பெறும். அதற்கு திவ்யமான ரஸாயனம் போல் அமைந்தது அவர்களின் யௌவனம்.

 

96.    விஜ்ரும்ப4மாண ஸ்தந குட்மலாநாம்

வ்யக்தோந்மிஷத் விப்4ரம ஸௌரபா4ணாம்

மது4வ்ரதத்வம் மது4ராக்ருதீநாம்

லேபே4 லதாநாம் இவ வல்லவீநாம் (வரதராஜ பஞ்சாசத் 1, கோபால விம்சதி 14)

 

       யௌவன ப்ரவேசம். மனதில் பல எண்ணங்கள், கோபிகளின் யௌவனம் உதயமாகின்றது. திருமுலைத்தோற்றம், மொக்குகள் போன்ற வடிவம், அதில் ஒரு எழுச்சி, மலர் அலர்கின்றபோது வெளியாகும் நறுமணம், அழகு பரவுகின்றது. மேனி மினுமினுக்க ஆரம்பிக்கின்றது. மிடுக்கான தோற்றம். இத்தகைய கோப ஸ்த்ரீகளைச் சுற்றி பார்வை வட்டமிடுகின்றது. இது அழகான கொடியில் மொக்கு எழுவதும் அதனைச் சுற்றி வண்டு மொய்ப்பதும் போன்றதொரு நிலை. இதை கோபிகளின் விஷயத்தில் கண்ணன் அடைந்தான்.

 

97.    அதிப்ரஸங்கா3த் அவதீ4ரயந்த்யா

ப்ராசீநயா ஸம்யமிதோ நியத்யா

பாஞ்சாலகந்யாம் இவ பஞ்சபு4க்தாம்

4ர்மஸ் ஸதீ: ஆத்3ருத தாத்3ருசீஸ்தா:

 

முந்திய ஸ்லோகத்தில் கண்ணனும் கோபியர்களும் ச்ருங்கார சமாதியில் இணைந்தது ரம்யமாகவும் கோப்யமாகவும் காட்டப்பெற்றது. ஒரு மரத்தில் பல் கொடிகள் இணைந்து விளங்குவது போன்றதாக இது ஆகிவிட்டது. க்ருஷ்ணம் தர்மம் ஸநாதநம். ஆனால் கோபிகளின் விஷயத்தில் இது தர்ம வ்ருத்தமாகின்றதே? அவற்றிற்கு எல்லாம் அடக்கமான ஸமாதானத்தை இந்த ஸ்லோகத்தில் கூறுகின்றார்.

 

கோபிகள் கண்ணனை நினைத்தபின் வேறு எந்த புருஷனையும் நினைத்திலர் என்கிறார் ஸ்ரீ சுகர் பாகவதத்தில். உன்னிடம் லயித்த எங்கள் மனம் வேறொன்றில் லயிக்குமோ? வறுபட்ட தானியம் முளைக்குமோ? அதிப்ரஸங்கம் ஏற்படாவண்ணம் அவர்கள் நிலை இருந்தது என்று கருத்து. மேலும் முந்தையதான ஒரு விதியால் கட்டுப்பட்டதாய் க்ருஷ்ணானுபவ சௌபாக்யத்தை முன்பிறவியில் செய்த தவத்தினால் சேமித்து வைத்துக் கொண்டனர் என்பதாம். உன்னைப்போல் ஒரு புத்திரன் வேண்டுமென்றதால் பகவானே புத்திரனாய் வரநேர்ந்தது. அதைப்போல் க்ருஷ்ணனையே பதியாக வரித்த பாக்யம் இப்போது பலித்தது எனவும் கொள்ளலாம். அத்தகைய நிலையில் உள்ள அவர்களை தர்மம் பதிவ்ரதை என்றே ஆதரித்தது.

மேலும் ஐவரால் அனுபவிக்கப்பெற்ற பாஞ்சாலராஜனின் புத்ரியைப்போல் என்கிறார். தர்ம வ்யவஸ்தைகளைப் பண்ணிய வ்யாஸ, பராசர,பீஷ்ம விதுரர் சாட்சியாக த்ரௌபதியை ஐவர் மணம் செய்து கொள்வது தர்மத்தில் ஏற்கப்பட்டுவிட்டது. அவள் பதிவ்ரதையாகவே கருதப்பட்டாள். அதுபோலவே இடைச்சிகள் விஷயத்திலும் கொள்ளவேண்டும். கண்ணன் இடையரில் ஒருவன் என்று அவர்கள் யாருக்கும் தோன்றவில்லை. அவர்களுடைய ச்ருங்காரம் சாமான்யமாகத் தோன்றினும் பரபக்தி ரூபம். அவர்கள் ரஸஸ்வரூபமான கண்ணனை அனுபவித்தனர். இப்படி ஈடுபடக்கூடாது என்று தடுக்க ஒரு நியதி இல்லை. தர்ம வ்யதிக்ரமம் தோன்றினாலும் அவர்களால் அதை சரிக்கட்ட இயலும். ஸோமன் கந்தர்வன் அக்னி பின்னரே மனிதன் என்று விவாஹ சாஸ்த்ரம் தெரிவிக்கின்றது. இங்கு பதிவ்ரதபங்கம் இல்லை. ஸர்வாந்தர்யாமியான கண்ணனை பிறர் என்று சொல்ல வாய்ப்பில்லை. அவ்ர்களின் பதியாகவே அவர்களுக்கு அந்த ரஸத்தை அளித்தான் என்றே கொள்ளவேண்டும். ஆதலால் கோபஸ்த்ரீகள் ஸதிகள் என்று உணர்த்தப்படுகிறது.

 

98.    தி3சாக3ஜாநாம் இவ சாக்வராணாம்

ச்ருங்கா3க்3ர நிர்பி4ந்ந சிலோச்சயாநாம்

ஸ தாத்3ருசா பா3ஹுப3லேந கண்டாந்

நிபீட்ய லேபே4 பணிதேந நீலாம்  (ஸ்ரீமத் பாகவதம் 10/58/32-52)

       கொம்புகளால் மலைகளைத் துகள்களாகச் செய்யும் இயல்புடைய, மஹாபலசாலிகளான திக்கஜங்கள் போன்ற காளைகளின் கழுத்துக்களை நெளித்து அடக்கவல்லதொரு செயலுக்கு வெகுமதியாக நப்பின்னையை அடைந்தான். (ஆன் ஏறு ஏழ் வென்றான் பெருமாள் திருமொழி 1/4/1) காம்பணை தோள் பின்னைக்காய் ஏறுடனேழ் செற்றதுவும் திருவாய்மொழி 2/5/7)  (வம்பவிழ் கோதை பொருட்டா மால்விடை ஏழடர்த்த திருவாய்மொழி 3/5/4). இங்கு ஸ்வாமி ஹரிவம்சத்தில் வந்த கதையை நினைவுபடுத்துகிறார். யசோதைக்கு விதேஹ நகரத்தில் கும்பகன் என்ற அரசர் இருந்தார். அவரிடம் ஆக்களும் ஆன்களும் அநேகம். காலநேமியின் ஏழு புதல்வர்களும் காளை வடிவெடுத்து அதில் புகுந்துவிட்டனர். தன் தந்தை பகவானால் கொல்லப்பட்டதையும் தாங்கள் தோற்றதையும் மனதில் கொண்டு கோகுலத்திலும் மற்ற அண்டை ப்ரதேசங்களிலும் தொல்லை கொடுத்து வந்தனர். அவற்றின் தொல்லை தாங்காத மன்னன் காளைகளை அடக்குபவர்க்கு தன் மகளை மனைவியாக்குவேன் என அறிவிக்க கண்ணன் அவற்றை அடக்கி அவளை மணந்தார் என்கிறது ஹரிவம்சம். ஸ்ரீமத் பாகவதத்தில் சத்யா (நாக்னஜிதி) என்பவளை எருதுகளை அடக்கி மணம் புரிந்தார் என்று குறிப்பிடப்படுகிறது. இதில் பால்யத்திலே நடந்த விவாஹம் என்பதால் ஹரிவம்ச கதாபாத்திரமே என்று அப்பைய தீக்ஷிதர் விளக்குகிறார்.

 

 

99.    கரேண த3ம்போ4ளி கடோரதுங்கா3ந்

தே3ஹாந் ப்ருதூந் தா3நவ து3ர்வஷாநாம்

விம்ருத்4ய நூநம் வித3தே4 முகுந்த3:

ப்ரியாஸ்தந ஸ்பர்ச விஹாரயோக்3யாம்  (நாராயணீயம் 81/4)

 

       வஜ்ராயுதம் போல் கடினமானதும் மிகப்பெரியவையுமான அஸுர துஷ்டர்களான காளைகளின் பூதாகாரமான உடல்களை ஒருகையினாலேயே அழுத்தி அழித்த முகுந்தனான கண்ணன் தனது ப்ரியையின் திருமுலைத்தடங்களைத் தொட்டு அணைக்கவும் அழுத்தவும் முன்கூட்டியே பயிற்சி செய்துகொண்டான் போலும். (லக்ஷ்மி சஹஸ்ரத்தில் ஸ்வாமி வேங்கடாத்வரி ப்ரயத்ன ஸ்தபகத்தில் சாதிக்கிறார். உலகுக்கே உணவூட்டக்கூடிய உனது ஸ்தனபாரத்தினை தாங்குவதற்காகவே கூர்மாவதாரத்தில் மலையைத் தூக்கிப் பயிற்சி செய்தாரோ? ஸ்வாமி தேசிகனின் இச்ச்லோகத்தினை ஸ்வாமி இதற்கு உதாரணமாகக் கொண்டாரோ?)

 

100.ஆத்மீய பர்யங்க3 பு4ஜங்க3கல்பௌ

அக்ஷேப்ய ரக்ஷா பரிகௌ4 ப்ருதி2வ்யா:

நீலோபதா4நீகரணாத் ஸ மேநே

பூ4யிஷ்ட த4ந்யௌ பு4ஜபாரிஜாதௌ

.

தனது பள்ளிக்கட்டிலான ஆதிசேஷன் போன்றவையும் பூமிக்கு அகற்ற முடியாத உழல்தடிகளோ எனத் தோன்றும் தனது புஜங்களை நப்பின்னைக்கு

அணையாக்குவதால் அவை சிறந்த பாக்யம் செய்தனவோ என்று எண்ணினான். அப்புஜங்களும் பாரிஜாத மரத்தை ஒத்திருந்தது. புஜங்களை பாரிஜாத மரங்களாக வர்ணிப்பது ரஸம். பெண்களையோ அவர்களின் கைகளையோ கொடிபோல் வர்ணிப்பதும் உண்டு. மரத்தைச் சுற்றிக் கொடி பட்ர்வதுபோல் ஆடவரை அண்டி பெண்கள் அணைத்து விளங்குவர். கண்ணனே பாரிஜாதம் எனில் அவன் கைகளை மட்டும் பாரிஜாதம் என்று எப்படி கூறலாம்? பாரிஜாதங்கள் போன்றிருக்கும் கைகள் என்று உபமானமாகவே கூறப்பட்டது. மென்மை, அழுத்தம் நறுமணம் ஆகிய மூன்று தன்மைகளையும் உணர்த்துவதற்காகவே உணர்த்தப்பட்டன போலும். (சென்று சினவிடையேழும் பட அடர்த்துப் பின்னை செவ்வித்தோள் புணர்ந்து…பெரியதிருமொழி 3/10/10)

 

101.ராகா3தி3ரோக3 ப்ரதிகாரபூ4தம்

         ரஸாயநம் ஸர்வத3சாநுபா4வம்

         ஆஸீத் அநுத்4யேயதமம் முநீநாம்

         தி3வ்யஸ்ய பும்ஸோ த3யிதோபபோ43:

 

       முந்திய ஸ்லோகத்தில் கண்ணன் நப்பின்னையை அனுபவித்த முறையை பரமபோக்யமாய் அருளிச் செய்தார். இவ்விதம் லீலைகளை அனுபவித்தல் சரியா? ச்ருங்கார ரஸ புஷ்டியை மையமாய் வைத்துப் பாடுபவர் எங்ஙனம் வேண்டுமானாலும் பாடிவிட்டுப் போகட்டும்! ஆனால் ஸ்வாமி இப்படியெல்லாம் வர்ணிக்க வேண்டுமா? இவ்வகையில் எழும் சந்தேகங்களுக்கு ஸ்வாமி இச்ச்லோகத்தில் விடையளிக்கிறார். கவி சமயத்தில் கவிகள் கையாண்ட முறையை மீறுவது பொருத்தமில்லை, மேலும் கண்ணனுடைய திவ்யமான லீலைகளையும் திவ்யமான சரிதங்களையும் அவன் காட்டித்தந்ததை அவ்வண்ணமே கூறுவதுதான் ஏற்றம். நப்பின்னை போகாதிகளை பரமபோக்யமாக வர்ணித்தபோது கூட சித்தவிஹாரம் ஏற்படாது. இது எல்லா அவஸ்தைகளுக்கும் போக்யமாகவும் மனதில் ஏற்படும் விகாரங்களுக்கு நிவாரணமாகவும் எல்லா சமயங்களிலும் உபயோகப்படக் கூடிய ஓர் அற்புதமான ஔஷதமாகவும் முனிவர்களின் த்யானத்திற்கு பகவத் ச்ருங்கார சேஷ்டைகள் போக்யமாகவும் இருந்தது.

 

102.அநுத்3ருதா நூநம் அநங்க3பா3ணை:

ஸுலோசநா லோசநபா43தே4யம்

ப்ரத்யக்3ரஹீஷு: ப்ரதிஸந்நிவ்ருத்தம்

த்யக்தேதரை: அக்ஷிபி4: ஆத்மநா ச

 

       விதேஹ நாட்டிலிருந்து திரும்பி வருகின்றவனும், கண்களுக்கு பாக்யமாய் இருப்பவனுமான கண்ணனை, கண்ணழகிகளான பெண்டிர் மன்மத பாணங்களால் துரத்தப்பட்டவர்களாய் மற்றொன்றினைக் காணாத கண்களாலும் உள்ளத்தாலும் எதிர்கொண்டழைத்தனர்.

 

103.வ்ரஜோபகண்டே விபு3தா4நுபா4வ்ய:

கோ3பீஜநைர் ஆத்மகு3ணாவதா3தை:

ஸமாவ்ருதோ நந்த3ஸுத: சகாசே

தாராக3ணைர் இந்து3: இவாந்தரிக்ஷே

 

       கோகுலத்தின் அருகில் தமது குணங்களால் தூய்மையுடைய கோபஸ்த்ரீகளுடன் மஹா மேதாவிகளால் அனுபவிக்கத்தகுந்த குணக்கடலான நந்தகோபரின் மைந்தன் வானில் நக்ஷத்திரங்களுடன் விளங்கும் சந்திரன் போல விளங்கினான்.

104.ஹத்வா ஸயூதம் த்ருணராஜஷண்டே

ராமாச்யுதௌ ராஸப4தை3த்ய உக்3ரம்

அதோஷயேதாம் ப்4ருஷம் ஆத்மப்4ருத்யாந்

ஸ்வாத்4யை: ஸுதா4பிண்டநிபை4: பலௌகை4: (ஸ்ரீமத் பாகவதம் (10/15/15-44)

 

(காட்டை நாடித் தேனுகனும் களிறும் புல்லும் உடன்மடிய வேட்டையாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே நாச்சியார் திருமொழி 14-9)

Thanks to maransdog.org

       பனங்காட்டில் தனது இனத்துடன் மிகக் கொடிய உருவில் வந்த அஸுரனைக் கொன்று ராமனும் கிருஷ்ணனும் மிகவும் ருசிகரமானவையும் அமுதக்கனியோ என்பது போலிருந்த பனம்பழங்களால் தமது வழிவந்தவர்களை மகிழச்செய்தனர். இதுவரை கண்ணனின் சரிதத்தையே கூறி வந்தார். இப்பொழுது பலராமனுடன் இணைந்து கண்ணன் செய்ததை குறிப்பிடுகிறார். பனங்காட்டில் கழுதை உருவில் வசித்த தேனுகன் என்ற அசுரன் மனிதர்களையே கொன்று தின்பதால் மனித சஞ்சாரமே இல்லாமல் போய்விட்டது. அங்குள்ள பனைமரங்களில் பழங்கள் காய்த்துத் தொங்கின. கண்ணனைச் சேர்ந்தவர்களுக்கு அதில் ஆசை ஏற்படவே பலராமன் அங்கு சென்று மரங்களை குலுக்கி உலுக்கினார். இதைக் கண்ட தேனுகன் பலராமன் மீது பாய அவனையும் அவனோடு வந்த அனைத்து அசுரர்களையும் அழித்தார். அன்று அவர்கள் அப்பழங்களையும் உண்டு களித்தனர்.

 

105.கதா3சித் ஆஸாதி3த கோ3பவேஷ:

க்ரீடாகுலே கோ3பகுமாரப்3ருந்தே3

ஸ்கந்தே4ந ஸங்க்3ருஹ்ய ப3லம் ப3லோயாந்

தை3த்ய: ப்ரலம்போ3 தி3வம் உத்பபாத (ஸ்ரீமத் பாகவதம் 10/18/17-30)

       ஒரு சமயம் கண்ணன் பலராம கோஷ்டி, தன் கோஷ்டி என்று வகுத்துக் கொண்டு விளையாடினான். அச்சமயம் ப்ரலம்பன் என்ற அசுரன் இடையர் வேடம்ப் பூண்டு உள்ளே புகுந்து கண்ணனை தனித்து இழுத்துச் சென்று கொல்ல நினைத்தான். இதையறிந்த கண்ணன் ஒரு விளையாட்டினை வகுத்தான். தோற்றவன் வென்றவனைச் சுமந்து செல்லவேண்டும் என்பதே அது. தான் தோற்றதாக காண்பித்து ஸ்ரீதாமா என்பவனைச் சுமந்து சென்றார்ன். இதைக் கண்ட ப்ரலம்பன் பலராமனிடம் தோற்றதாகக் காண்பித்து அவனைத் தோளில் சுமந்து வெகுதூரம் சென்று வானில் எழும்பினான்.

 

106.பபாத பூ4மௌ ஸஹஸா ஸ தை3த்ய:

தந்முஷ்டிநா தாடிதசீர்ணமௌலி:

மஹேந்த்3ரஹஸ்த ப்ரஹிதேந பூர்வம்

வஜ்ரேண நிர்பி4ந்ந இவாசலேந்த்3ர:.  (நாராயணீயம் 57வது தசகம்)

Thanks to onlynarayaneeyam.blogspot.com

 

      அந்த அஸுரன் பலராமனின் முஷ்டியினால் குத்தப்பெற்று தலை பலவாறு சிதறியவாறு மறுகணமே பூமியில் விழுந்தான். இந்திரன் வஜ்ராயுதத்தினால் மலைகளைப் பிளக்க அம்மலை விழுந்தது போல் இருந்தது. (தேனுகன் பிலம்பன் காளியன் என்னும் தீப்பப்பூடுகள் அடங்க உழக்கி பெரியாழ்வார் 3/6/4)

 

107.ஸ்வவாஸஸா க்லுப்த கலங்கலக்ஷ்மீ:

காந்த்யா தி3ச: சந்த்3ரிகயேவ லிம்பந்

ரராஜ ராமோ த3நுஜே நிரஸ்தே

ஸ்வர்பா4நுநா முக்த இவோடுராஜ:

 

       தனது ஆடையினால் களங்கம் பெற்றது போலவும், தனது உடலழகால் நிலவு கொண்டு திக்குகளை வெள்ளை பூசுவது போலவும் ப்ரலம்பாஸுரன் மாண்டவுடன் ராகுவின் பிடியிலிருந்து விடுபட்ட சந்திரன் போல பலராமன் விளங்கினான். (பலராமன் எப்போதும் நீலநிற ஆடை அணிந்திருப்பான். பொன்னிறமான அவனது உடலுக்கு அது சந்திரனில் உள்ள களங்கமோ என்று சொல்லும் வகையில் அமைந்துவிட்டது). (கருளுடைய பொழில்மருதும் கதக்களிறும் பிலம்பனையும் ………….உடையவிட்டு ஓசை கேட்டான். பெரியாழ்வார் 4/9/3)

காளிங்க ந(ம)ர்த்தனம் : (108-127) (ஸ்ரீமத் பாகவதம் 10/16/1-67)

 

 

108.விநைவ ராமேண விபு4: கதா3சித்

ஸஞ்சாரயந் தே4நுக3ணம் ஸவத்ஸம்

வநச்ரியா தூ3ர விலோபி4தாக்ஷ:

கஞ்சித் யயௌ கச்சம் அத்3ருஷ்டபூர்வம்     (நாராயணீயம் 55வது தசகம்)

 

       பலராமன் இல்லாமலேயே ஒருசமயம் ஆவினத்தை மேய்க்க கன்றுகளுடன் மேய்க்கச் சென்ற கண்ணன் வனத்தில் வனப்பினால் ஈர்க்கப்பெற்று வெகுதூரம் சென்றுவிட்டான். அங்கு இதற்குமுன் கண்டிராததொரு ஓடை மடு இருந்தது.

 

109.யத்ருச்சயா சாரித தே4நுசக்ர:

கூலாந்திகே விச்வஜநாநுகூல:

கலிந்த3ஜாம் காலிய பந்நக3ஸ்ய

க்ஷ்வேலோத்க3மை: கஜ்ஜலிதாம் த33ர்ச:

       ஸ்வதந்திரமாக மாடு மேய்த்துவரும் கண்ணன் உலகங்களுக்கெல்லாம் அநுகூலமாயிருப்பவன் அக்கரையின் அருகில் காளியன் என்ற அரவின் விஷத்தினால் கொப்பளித்துக் குழம்பி சாந்து போன்றிருக்கும் நீரினுடைய யமுனையைக் கண்டான். (யமுனைக்கு களிந்தஜா என்றும் பெயர். கலிந்த மலையில் தோன்றுகிறபடியால் இப்பெயர்.)

 

110.விஷாக்3நிநா முர்முரித ப்ரதாநே

வைரோசநீ தீரவநாவகாசே

அஹீந்த்3ரம் ஆஸ்கந்தி3தும் அத்4யருக்ஷத்

காஷ்ட்டாக்ருதிம் கஞ்சன நீபவ்ருக்ஷம்

விஷத்தீயினால் ஒரு வகையான கொந்தளிப்பும் ஓசையும் உடைய யமுனையாற்றங்கரையில் உள்ள காட்டுப்ப்ரதேசத்தில் இலை மலர் தளிர் ஏதுமில்லாமல் வெறும் கட்டையாக இருந்த ஒரு கடம்பமரத்தில் ஏறி அங்குள்ள அப்பாம்பினை அழிக்க எண்ணினான். (விரோசனன் சூரியன். அவனுடைய பெண் வைரோசநீ) களிந்தன் என்றாலும் சூரியன். ஆகவே காளிந்தீ என்றும் யமுனையை அழைப்பர். . மேலும் பாகவதம் 10வது ஸ்கந்தம் 58வது அத்யாயத்தில் சூரியனின் பெண்ணான காளிந்தீ என்பவள் விஷ்ணுவைத் தவிர வேறொருவரை மணக்கமாட்டேன் என்று கூறி கடுந்தவம் புரிந்தாள். சூரியனால் யமுனைக்குள் நிர்மாணிக்கப்பட்ட நகரில் அவள் வசித்தாள். க்ருஷ்ணன் அவளை மணந்து கொண்டார். அவரின் அஷ்டமஹிஷிகளில் ஒருவளாய் அவள் திகழ்ந்தாள். காளிந்தி வசித்தபடியால் யமுனைக்கு காளிந்தீ என்றும் பெயர்)

 

81.    மது4த்3ரவைர் உல்ப3ண ஹர்ஷபா3ஷ்பா

ரோமாஞ்சிதா கேஸர ஜாலகேந

பத்ராங்குரை: சித்ரதநு: சகாசே

க்ருஷ்ணாச்ரிதா சுஷ்க கத3ம்ப3சாகா

The kadamba tree in kaliya ghat in vrindavan

       அந்தமரம் செய்த பாக்யத்திற்கு ஈடான பாக்யம் வேறு யாருக்கும் இல்லையெனலாம். யமுனையாற்றங்கரையில் இம்மாதிரி ஒரு மரமாக ஆவேனோ என்று பக்தியினால் ஏங்குவதும் உண்டு. பட்டுப்போன மரத்தின் கிளை திருவடி ஸ்பர்சத்தினால் பால் கட்டியது. ஆனந்தக்கண்ணீர் வடிப்பது போல் சொட்டுசொட்டாகப் பால் சிந்தியது. கிளை முழுவதும் தளிர் தோன்றியது. இது மயிர் கூச்செறிவது போலாயிற்று. கேஸரங்கள் படிந்தது விசித்திரமான உடலமைப்பு பெற்ற யுவதியைப் போலாயிற்று. இவ்வளவும் கண்ணனின் திருவடி சேர்க்கையின் பயனேயன்றோ? கண்ணனின் பார்வைக்கே அந்த தன்மையுண்டு. திருவடி சேர்க்கைக்கு கேட்கவா வேண்டும்? கல்லைப் பெண்ணாக்கியது போல் மரமும் உயிர்த்தெழுந்தது.  ( ஆசிந்வத……… அதிமாநுஷஸ்தவம்  – ப்ருந்தாவனத்தில் உள்ள மரங்களில் நீ ஏறுவாய். உன் திருவடித் தொடர்பு பெற்றதால் அதன் சந்ததிகள் கூட நமக்கு குல தைவதம் போன்றது)

 

82.    நிபத்ய ஸங்க்ஷிப்த பயோதி4கல்பே

மஹாஹ்ரதே3 மந்த3ரபோத ரம்ய:

விஷ வ்யபோஹாத் அம்ருதம் விதா4தும்

ஸ்வாதூ3தயம் க்ஷோப4யதி ஸ்ம ஸிந்து4ம்

 

சுருங்கியதான ஸமுத்திரமோ என்று சொல்லக்கூடிய அம்மடுவில் மந்தர மலையின் குட்டியோ என்று சொல்லக்கூடிய மிகவும் அழகான கண்ணன் குதித்து விஷத்தை அகற்றி அமுதத்தை உண்டுபண்ணவோ என்னலாம்படி கடலைப்போல அதைக் கலக்கலானான்.

 

83.    க்ருதாஹதி: க்ருஷ்ண நிபாதவேகா3த்

ஆநந்த3ரூபா விததைஸ் தரங்கை3:

ஸர்பாபஸாரௌஷதி ஸம்ப்ரயுக்தா

பே4ரீவ ஸா பீ4மதரம் ரராஸ

 

       கண்ணன் குதித்த வேகத்தினால் அந்த மடுவில் உள்ள நீரானது தாக்கப்பட்டதாய் (குதித்த வேகம்,குதிக்கும்போது ஏற்பட்ட வேகம், ஆழம் அழுத்தம், இவற்றால் தாக்கப்பட்டதாய்) பேரலைகள் எழுந்து யமுனையே பேரலைகளால் போர்த்தப்பட்ட மாதிரி ஆகிவிட்டது. அப்பொழுது எழுந்த பேரோசை பாம்புகளே வெளியேறிவிடுங்கள் என்று எச்சரிக்கை செய்து அடிக்கப்படும் பேரீவாத்யம் போல் பயங்கரமாய் இருந்தது.(பச்சிலைப் பூக்கடம்பேறி விசைகொண்டு பாய்ந்துபுக்கு பெரியதிருமொழி 10/7/12) (ஸர்பாபஸாரௌஷதி சாதாரணமாகவே பேரியில் அதிக ஓசை ஏற்பட சில மூலிகைகள் பூசப்படுவதுண்டு. அதன்மீது ஒருவிதமான மூலிகையின் சாற்றினைப் பூசினால் அதிலிருந்து கிளம்பும் ஓசை பாம்புகளை விரட்டச் செய்யும்.)

 

84.    ப்ரஸக்த க்ருஷ்ண த்4யுதிபி4: ததீ3யை:

ப்ருஷத்கணை: உத்பதிதை: ப்ரதூர்ணம்

அத்3ருச்யதாத்4யோதிதம் அந்தரிக்ஷம்

பீதாந்த4காரைர் இவ தாரகௌகை4:

 

       கண்ணனுடைய திருமேனி ஒளிகளின் சேர்க்கையால் மேன்மேலும் எழும்புகின்ற அலைகளின் திவலைகளைப் பார்க்கும்போது வானில் நக்ஷத்திரங்கள் எல்லாம் இருளைக் குடித்திருக்கின்றனவோ என்று சொல்லும் பாங்கில் அமைந்துள்ளது. முந்திய ஸ்லோகத்தில் அலைகள் உண்டானபோது ஏற்பட்ட ஒலியை விளக்கினார். இப்போது ஒளியினை விளக்குகிறார். யமுனையின் நிறம் வானம் போல இருக்கின்றது. அதில் வெளுத்த  அலைத்திவலைகள் தோன்றும்போது இடையிடையே கறுப்பு நிறமும் தோன்றுகிறது. இந்த நக்ஷத்திரங்கள் இருளைக் குடித்து விட்டனவோ என்பது போலத் தோன்றுகிறது. இதைத்தான் 2வது ஸர்கத்தில் விளக்கும்போது சந்திரனில் உண்டான களங்கம் அவனால் குடிக்கப்பட்ட இருளாகும் என்கிறார் ஸ்வாமி.

 

85.    உத3க்3ரஸம்ரம்ப4ம் உதீ3க்ஷ்ய பீ4தா:

தார்க்ஷ்யத்4வஜம் தார்க்ஷ்யம் இவாபதந்தம் (இவ ஆபதந்தம்)

ப்ரபேதி3ரே ஸாக3ரம் ஆச்ரிதௌகா4:

காகோத3ரா: காலியமாத்ர சேஷா:

       அதிகமான கோபத்துடன் சீறிப்பாய்ந்த கண்ணனைக் கண்டவுடன் கருடனைக் கண்டதைப் போல் நடுநடுங்கிய பாம்புகள் எல்லாம் யமுனையின் வெள்ளத்தில் பாய்ந்து கடலை அடைந்து விட்டன. காளியன் மட்டுமே இருந்தது. (நஞ்சுமிழ் நாகம் கிடந்த பொய்கைபுக்கு அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டருள் செய்த அஞ்சன வண்ணன் 3/9/5 பெரியாழ்வார்)

 

86.    அதா2ம்ப4ஸ: காளியநாக3ம் உக்3ரம்

வ்யாத்தாநநம் ம்ருத்யுமிவ: உஜ்ஜிஹாநம் (ம்ருத்யுமிவோஜ்ஜிஹாநம்)

போ4கே3ந ப3த்4நந்தம் அபோஹ்ய சௌரி:

ப்ரஹ்வீக்ருதம் தத்பணம் ஆருரோஹ

 

       திறந்த வாயுடன் காளிய மடுவிலிருந்து யமன் போல் வெளிவருவதும், மிகவும் கொடியதுமான தனது உடலாலே கண்ணனைக் கட்டுவதுமான அந்த பயங்கரநாகத்தை உதறித்தள்ளி தாழ்ந்திருக்கும் அதன் தலையில் ஏறிவிட்டான்.

(தளைக் கட்டவிழ் தாமரை வைகு பொய்கைத் தடம்புக்கு அடங்கா விடங்கல் அரவம் இளைக்கத் திளைத்திட்டு அதனுச்சிமேல் அடிவைத்த அம்மான் (திருமொழி 3/8/7)

 

87.    ஸத்4யோ மஹாநீலமயீம் முகுந்த3:

ஸ பத்மராகா3ம் இவ பாத3பீடீம்

க்ராமந் ப2ணாம் காளிய பந்நக3ஸ்ய

க்3ரஸ்தோதி3தோ பா4நு: இவாப3பா4ஸே

       காளியன் கருநாகம். அதனுடைய தலை மிகவும் கரியது, அதனுடைய தலையில் மாணிக்கம். அம்மாணிக்கம் சிவந்தது. அது பத்மராகம் போலுள்ளது. இந்திரநீலக்கல்லில் பதித்த பத்மராகம் என்பதுபோல் அமைந்திருக்கிறது. அப்படியொரு பாதபீடம் அமைக்கப்பட்டதோ என்னலாம்படி அதன் தலை இருக்கிறது. அதில் தனது திருவடியை வைத்தான். மணிபீடம் கிடைத்துவிட்டது போலும். இப்போது கண்ணன் ராகுவின் பிடியிலிருந்து வெளிக்கிளம்பும் சூரியன் போலிருக்கிறான்.

 

88.    2ணாமணீநாம் ப்ரப4யோபரக்தே

கே2லந் ப3பௌ4 சக்ரிணி சக்ரபாணி:

ப்ரதோ3ஷஸிந்தூ3ரிதம் அம்பு3வாஹம்

ப்ராசேதஸோ நாக3 இவோபம்ருத்3நந்

       பாம்பின் தலைகளில் விளங்கும் மணிகளின் காந்தியினால் மேலும் சிவப்பாயிருக்கிறது அந்த கருநாகம். அதன் மீது விளையாடுகின்றான் கண்ணன். சக்ரீ என்பதற்கு பாம்பு என்று பொருள். மேலும் அவன் உடல் சுருண்டு சக்கரம் போல் ஆகிவிட்டது. குண்டலம் குண்டலமாக மாணிக்கங்கள். மணிகளின் காந்தி உடல் முழுவதும் வீசுவதால் நிஜரூபம் மறைந்து பாம்பே சிவப்பாக மாறிவிட்டது. மாலை வேளையில் (ப்ரதோஷ வேளையில்) சூரியனுடைய மந்தமான கிரணத்தினால் மேகம் சிவந்து காணப்படுவது போல் காளியன் காணப்படுகிறான். இங்கு கண்ணன் காளிங்கன் மேல் குதித்து சிவந்த வானத்தை மிதித்து விளையாடும் மேற்கு திக்கஜமான வாருண வாரணத்தை போல் ப்ரகாசிக்கிறான் .

 

89.    ப்ரணேமுஷாம் ப்ராணப்4ருதாம் உதீ3ர்ணம்

மநோ விநேஷ்யந் விஷமாக்ஷ வக்த்ரம்

அகல்பயத் பந்நக மர்த்த3நேந

ப்ராயேண யோக்3யாம் பதகே3ந்த்3ரவாஹ:

 

       சக்ரபாணியான கண்ணன் சக்ராகாரத்தில் வளைந்துவிட்ட காளியனின் தலையில் விளையாடினான் என்பதனை எடுத்துக் கூறினார். அங்கு அந்த விளையாட்டு அவன் தலைகளை நசுக்க ஆரம்பித்துவிட்டது. அங்கு விளையாட்டு போல் தோன்றினும் அழுத்தமே ப்ரதானம். ஒரு தலையை அழுத்தும்போது வேறொரு தலை எழும்புகிறது. அதை அழுத்தினால் வேறு தலை என்ற கணக்கில் எழுவதால் அனைத்தையும் மிதித்து வருவதால் விளையாட்டாகத் தோன்றினாலும் அதிலிருந்து நாம் அறிய வேண்டியவற்றை சுட்டிக் காட்டும் பாங்கு அலாதியானது. சரணம் அடைந்தவர்களின், மிக மிக கொடியதில் இழியும் விஷமான நோக்குகளையுடைய மனதினை திருத்துவது எப்படி என்பதை நிரூபிக்கின்றவனாய் காளியனின் தலைகளை மிதித்துக்காட்டி கண்ணன் ஒருவிதமான எடுத்துக்காட்டை நிரூபிக்கின்றான். ( விஷமாக்ஷ வக்த்ரம் விஷமான கண்களையுடைய முகம். மநோ மந: விஷமான இந்திரியங்களை முகமாகக் கொண்ட என்று அர்த்தம். மனதிற்கு உருவமில்லை. ஆனால் அது இந்திரியங்களின் வாயிலாகச் செயல்படுகிறது. மனதின் சேர்க்கை இல்லாவிடில் இந்திரியங்கள் செயல்படுவதில்லை. ஆதலால் அது இந்திரியங்களை ஆட்டிப்படைக்கிறது. 10 இந்திரியங்களை முகமாகக் கொண்டது மனது என்ற அரக்கன் என்று ஸ்வாமி தேசிகன் விவரிக்கிறார். அதேபோல் 101 முகங்களும் க்ரூரமான கண்களையும் கொண்ட அப்பாம்பினை அழுத்தி நசுக்கி மனதை எப்படி அடக்குவது என்பதை அப்யாஸமாக விவரிக்கிறான் போலும்.

 

 

90.    தத்3 போ43ப்3ருந்தே3 யுக3பத் முகுந்த3:

சாரீ விசேஷேண ஸமைக்ஷி ந்ருத்யந்

பர்யாகுலே வீசிகணே பயோதே4:

ஸங்க்ராந்த பி3ம்போ3 பஹுதே3வ சந்த்3ர:

 

 

அப்பாம்பின் பணாமணிகளில் சாரீ என்ற முறையில் நர்த்தனம் செய்கின்ற அந்த முகுந்தன் கலக்கமுற்று கொதித்து எழும் அலைக்கூட்டத்தின் நடுவே ஒரே சமயத்தில் தோன்றும் பல உருவங்கள் கொண்ட சந்திரன் போல் காணப்பட்டான்.  சாரீ என்பது ஒரு நர்த்தன வகை. ந்ருத்ய சாஸ்திரத்தில் ந்ருத்யாரம்பத்தில் செய்யப்படும் பாதகதி. நர்த்தனம் பண்ணும்போது கால், முழங்கால்,தொடைகளின் செயல்களுக்கு சாரீ என்று பெயர். சந்திரன் அலைகளில் தென்படுவது போல் கண்ணனின் நர்த்தனம்  அதன் பணாமணிகளில் தென்பட்டது என்பதாம். ((பட அரவு உச்சிதன் மேலே பாய்ந்து பல் நடங்கள் செய்து …பெரிய திருமொழி 4/6/5)

 

      

91.    தத் உத்தமாங்க3ம் பரிகல்ப்ய ரங்க3ம்

தரங்க3 நிஷ்பந்ந ம்ருதங்க3நாத3ம்

ப்ரகஸ்யமாந: த்ரீத3சைர் அகார்ஷீத்

அவ்யாஹதாம் ஆரப4டீம் முகுந்த: (அநந்த:)

 

       அந்த காளியனின் சிரஸ்ஸை மேடையாக வைத்துக்கொண்டு அலைகளின் ஓசைகளை ம்ருதங்க ஒலியாகக் கொண்டு தேவர்களால் போற்றப் பெற்றவனாய் தட்டுத்தடையில்லாமல் ஆரபடீ என்ற நடனத்தை ஆரம்பித்தான். தேவர்கள் ரஸிகர்கள். எந்தவொரு செயலும் ரஸிகர்களின் கோஷம் இருந்தால் தனித்ததொரு உற்சாகம் பெறும். இங்கு தேவர்கள் போற்றுதலையே தொழிலாகக் கொண்டவர்கள். மேலும் யோகக்ஷேமத்திற்காக நடைபெறும் நாட்டியம். எனவே இவர்கள் அனைவரும் கூடி நின்று போற்றினர். விஷ்ணுபுராணம் குறிப்பிடுவது போல் இது நர்த்தனமா! மர்த்தனமா! அல்லது மர்த்தனரூபமான நர்த்தனமா!

(ஆரபடீம் ரௌத்ர ரஸ ப்ரதான வ்ருத்தி) (ப்ரளயாரபடீம் நடீம் தயாசதகம் 23)

 

92.    ஏகேந ஹஸ்தேந நிபீட்ய வாலம்

பாதே3ந சைகேந பணாம் உத3க்3ராம்

ஹரிஸ்ததா3 ஹந்தும் இயேஷ நாக3ம்

ஸ ஏவ ஸம்ஸாரம் இவாச்ரிதாநாம்

 

ஒரு கையினால் வாலைப் பிடித்து அழுத்தினான்.  அப்பொழுது ஹரி என்ற பெயருக்கேற்ப அப்பாம்பினைக் கொல்ல நினைத்தான். தலைகள் பலவாயினும் வால் ஒன்றே. வாலாட்ட முடியாமல் போயிற்று அப்பாம்பினால். வாலால் விலக்க எண்ணியபோது கைப்பிடியிலிருந்து வாலையும் இழுத்துக்கொள்ள முடியவில்லை. உயர்ந்து விளங்கும் அதன் தலையை ஒரு காலினால் அழுத்திக் கொண்டு அழுத்தமாக மிதித்து துவைத்து துன்புறுத்தினான். வாலையும் இறுகப் பிடித்து துன்புறுத்தியது தன் திருவடிகளை அடைந்தவர்களின் ஸம்ஸாரத்தை மாய்ப்பது போலிருந்தது.

 

 

93.    ஸ பந்நகீ3நாம் ப்ரணிபாதபா4ஜாம்

த்3ரவீப4வந் தீ3நவிலாபபே4தை3:

ப்ரஸாதி3த: ப்ராதி3த ப4ர்த்ருபி4க்ஷாம்

கிம் அஸ்ய நஸ்யாத் பத3ம் த3யாயா (ஸ்ரீமத் பாகவதம் 10/16/33-53)

 

Lord Krishna

       திருவடியில் வந்து விழுந்து மன்றாடுகின்ற அந்த நாகபத்னிகளின் தீனமான வேண்டுதல்களால் மனம் இளகியவனாய் அவர்களிடம் இரக்கம் கொண்டு அவர்கள் வேண்டிய பர்த்ரு பிக்ஷையை கொடுத்துவிட்டான். அவனுடைய தயைக்கு எதுதான் இலக்காகாமல் போகாது. நாகபத்னிகள் செய்யும் ஸ்துதி விஷ்ணுபுராணத்தில் உள்ள அத்புதமான ஸ்தோத்ரம். கண்ணனின் மனதையே மாற்றியதன்றோ! (விஷ்ணுபுராணம் அம்சம் 5 அத்தியாயம் 7)

 

94.     லோலாபதச்சரண லீலாஹதிக்ஷரித

ஹாலாஹலே நிஜப2ணே

ந்ருத்யந்தம் அப்ரதிக4 க்ருத்யம் தம் அப்ரதிமம்

அத்யந்த சாருவபுஷம்

தே3வாதி3பி4: ஸமய ஸேவாத3ர த்3வரித

ஹேவாக கோ4ஷமுகரை:

த்3ருஷ்டாவதா4நம் அத2 துஷ்டாவ சௌரிம்

அஹி: இஷ்டாவரோத­4 ஸஹித:

 

 

       அழ்கான அடிவைப்புகளால் விளையாட்டாக ஏற்பட்ட அழுத்தத்தினால் விஷம் உதிர்ந்துவிட்ட விஷத்தை உடைய தனது ஸிரஸில் களிநடம் புரிகின்றவனும் தட்டுத்தடையேதும் இல்லாத செயல்களைச் செய்கின்றவனும், இணையில்லாதவனும், நிகரில்லாத அழகை உடையவனும், தனது சேவகத்தைப் போற்ற வேண்டிய வேளையில் போற்றுவதென்ற தொண்டினில் விரைந்து வந்து வானளாவிய குரலில் போற்றுகின்ற படியால் பெருகிய ஒலியுடன் வந்த தேவர்கள் கண் கொட்டாமல் அந்த நர்த்தனத்தை கண்டு களிக்க,  அத்தகைய கண்ணனை அக்காளியனும் தனது மனைவியருடன் கூடி துதிக்கலானான். ஸ்ரீமத் பாகவதத்தில் காளிய ஸ்துதி  4 ஸ்லோகங்களாகவும், ஸ்ரீ விஷ்ணுபுராணத்தில் 15 ஸ்லோகங்களும் உள்ளன. (ஸ்ரீமத் பாகவதம் 10/16/56-59)

 

95.          ஹரிசரண ஸரோஜ ந்யாஸ த4ந்யோத்தமாங்க3:

சமித க3ருடபீ4தி: ஸாநுப3ந்த4: ஸ நாக­3:

யுக3 விரதி த3சாயாம் யோக3 நித்3ராநுரூபாம்

சரணம் அசரணஸ் ஸந் ப்ராப சய்யாம் ததீ3யாம்

 

முன்பு கருடன் காளியனை தாக்குதல்     காளியன் கடலுக்கு செல்லுதல்

       நாராயணனுடைய செந்தாமரை போன்ற அடிவைப்புகளால் பாக்யம் பெற்ற சிரஸ்ஸை உடையவனும் கருடனிடமிருந்து உண்டான பயம் நீங்கியவனும் தம்மவர் அனைவரோடும் கூடியவனுமான அந்த நாகராஜம் யுகம் ஓயும்போது யோகநித்திரைக்கு ஏற்றதான அப்பரமனின் படுக்கையான கடலை வேறு கதியில்லாதவனாய் தஞ்சம் அடைந்து சரண் புகுந்தான். சமித கருடபீதி: கருடனுக்கும் பாம்புகளுக்கும் எப்போதுமே பகை உண்டு. இந்த காளியன் கருடபயத்தினால் தான் யமுனையில் இம்மடுவில் வாழ்ந்து வந்தது. ஸௌபரி என்ற முனிவர் கருடன் யமுனையில் மீனைப்பிடித்தால் அவன் அப்போதே தொலைவான் என்று இட்ட சாபத்தை காளியன் அறிவான் ஆதலால் அவன் பயமில்லாமல் இருந்தான். வெளியேறினால் தனக்கு ப்ராணாபாயம் ஏற்படும் என்று வேண்ட தன் பாத இலச்சினையை உன் தலையில் இருப்பதால் கருடபயம் வேண்டாம் என்று பெருமான் அபயம் அளித்ததால் காளியன் யமுனையை நீங்கி கடலை அடைந்தான்.

 

96.     விவித4 முநிகணோபஜீவ்ய தீர்த்தா

விக3மித ஸர்ப்பக3ணா பரேண பும்ஸா

அப4ஜத யமுநா விசுத்4தி3ம் அக்3ர்யாம்

சமித ப3ஹிர்மத ஸம்ப்லவா த்ரயீவ

 

       பற்பல வகையான முனிவர்களுக்கு உபயோகமுள்ள தீர்த்தத்தை உடையதாய் ஸர்ப்பக் கூட்டங்களே இல்லாமல் பரம்புருஷனால் ஆக்கப்பட்டதாய் இருக்கும் யமுனை வெளி மதங்களின் தொல்லை இல்லாத மறை போல சிறந்த தூய்மையை பெற்றுவிட்டது.

மதன் மோஹன் கோவில், ப்ருந்தாவனம், யமுனா நதிதீரம்

97.    அவதூ4த பு4ஜங்க3 ஸங்க3தோ3ஷா

ஹரிணா ஸூர்யஸுதா பவித்ரிதா ச

அபி தத்பத3 ஜந்மந: ஸ பத்ந்யா:

பஹுமந்தவ்யதரா ப்4ருசம் ப3பூ4

 

   பாம்புகளை அகற்றிவிட்டபடியால் சூர்யனுடைய பெண் தூய்மையடைந்து விட்டாள். ஹரியினுடைய திருவடியில் உண்டான கங்கையைக் காட்டிலும் யமுனை பெருமதிப்புக்கு ஆளாகிவிட்டது. இங்கு புஜங்க என்பதற்கு விஷபுருஷன் என்று கொள்ளலாம். யமுனை காளியனோடு இருந்தது தோஷம். இப்பொழுது விடனை விரட்டியாகி விட்டது. அன்றியும் க்ருஷ்ண அநுஸ்மரணமே ப்ராயச்சித்தம் என்கிற போது க்ருஷ்ண ஸ்பர்சம் ஏன் பவித்திரமாக்காது! இத்தகைய தூய்மை வேறு யாருக்கு கிடைக்கும்? தோஷம் நீங்கிப்போய் பிறரையும் தூய்மைப்படுத்துபவளாக மாறினாள். தூயபெருநீர் யமுனைத் துறைவனை மனத்தினால் சிந்தித்தால் போய பிழையும் புகுதுறுவான் நின்றனவும் தீயினில் தூசாகும்.

 

பூதனா மர்த்தனத்தில் ஆரம்பித்து காளிங்க நர்த்தனத்தில் இனிதே நிறைவுற்றது

 

சுபம்

 

Advertisements
Aside | This entry was posted in Uncategorized and tagged , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s